மத்திய தரக் குடும்பங்களுக்கு மலிவு விலையில் வீடுகளை வழங்கும் வேலைத்திட்டத்துக்கு அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது.
இன்று இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடக சந்திப்பில் அமைச்சர் கயந்த கருணாதிலக இதனைத் தெரிவித்துள்ளார்.
மத்தியதர குடும்பங்களில் வீடுகளுக்கான கேள்விகள் அதிகம் எழுந்துள்ளமையை கவனத்தில் கொண்டு அரசாங்கம் இது குறித்து அவதானம் செலுத்தியுள்ளதாகத் தெரிவித்த அமைச்சர், தொழிற்சங்கவாதிகள் மற்றும் வெவ்வேறு தர அதிகாரிகளின் வீட்டுத் தேவைக்காக கொட்டாவை, ஒருகொடவத்தை, அநுராதபுரம், நுவரெலியா, அவிஸ்ஸாவலை மற்றும் ஹொரனை ஆகிய பகுதிகளில் 1900 வீடுகளுக்கான வேலைத்திட்டத்தை ஆரம்பிக்க அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளதாக அமைச்சர் கயந்த கருணாதிலக தெரிவித்துள்ளார்.
பாரிய நகரம் மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க சமர்பித்த யோசனைக்கே அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது.