திமுக தலைவர் கருணாநிதி உடல் வைக்கப்பட்டு இருக்கும் ராஜாஜி அரங்கில் இருந்து மெரினா வரை லட்சக்கணக்கில் மக்கள் இருப்பது கூகுள் மூலம் தெரிய வந்துள்ளது. தமிழகத்தின் முதுபெரும் அரசியல்வாதியான திமுக தலைவர் கருணாநிதி நேற்று மாலை இந்த உலகை விட்டு பிரிந்து சென்றார். திமுக தொண்டர்கள் இதனால் பெரிய சோகத்தில் ஆழ்ந்து இருக்கிறார்கள்.தமிழகம் முழுக்க இதற்காக துக்கம் அனுசரிக்கப்படுகிறது. தற்போது அவருக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு தற்போது நடந்து வருகிறது. காலையில் இருந்து வரிசையாக தலைவர்கள் வந்து அவருக்கு அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். அங்கு லட்சக்கணக்கில் மக்கள் கூடி வருகிறார்கள்.
இதனால் அங்கு பெரிய அளவில் கூட்டம் நொடிக்கு நொடி அதிகரித்து வருகிறது. அண்ணாவிற்கு கூடிய கூட்டத்திற்கு நிகரான கூட்டம் தற்போது அங்கு கூடி வருகிறது. திமுக தலைவர் கருணாநிதி உடல் வைக்கப்பட்டு இருக்கும் ராஜாஜி அரங்கில் இருந்து அடக்கம் நடைபெற இருக்கும் மெரினா வரை லட்சக்கணக்கில் மக்கள் இருப்பது கூகுள் மூலம் தெரிய வந்துள்ளது.
கூகுள் மேப்பின் இந்த புகைப்படத்தில், சிவப்பாக இருக்கும் பகுதியில் எல்லாமும் லட்சக்கணக்கில் மக்கள் இருக்கிறார்கள். ராஜாஜி ஹாலை சுற்றி உள்ள எல்லா இடத்திலும் மக்கள் இருப்பது இதன் மூலம் தெரிய வந்துள்ளது. அதேபோல், மைனஸ் கொடுக்கப்பட்டு இருக்கும், இடங்களில் எல்லாம் சாலைகள் அடைக்கப்பட்டு இருக்கிறது.
ராஜாஜி ஹாலில் இருந்து மெரீனாவிற்கு ஒரு சாலையை தவிர மற்ற அனைத்து வழிகளும் அடைக்கப்பட்டு உள்ளது. கருணாநிதியின் இறுதி சடங்கிற்கு தமிழகம் முழுக்க பல்வேறு பகுதியில் இருந்து மக்கள் வந்திருப்பது குறிப்பிடத்தக்கது.