இரவு 9 மணிக்குப் பின்னர் இவற்றையெல்லாம் செய்ய வேண்டாம்….ஏன் தெரியுமா?

நிதானமாக வாழும் காலமெல்லாம் மலையேறி போய்விட்டது. காலில் சக்கரத்தைக் கட்டி கொண்டு இயந்திரத்தனமாக ஓடத் தொடங்கி விட்ட காலத்தில் நம் அன்றாட பழக்க வழக்கங்கள் எல்லாம் அடியோடு மாறி விட்டன.

நோயில்லா வாழ்வுதான் குறைவற்ற செல்வம் என்பதை நாமறிந்தாலும். குறைவற்ற செல்வத்தை பலர் கைநழுவ விட்டு, நோயின் பிடியில் சிக்கித் தவிக்கின்றனர்.

அன்றாடம் நம் உடலுக்கு 8 மணிநேரம் தூங்கம் என்பது மிகவும் அவசியம். அதுபோல் இரவு 9 மணிக்குள் சாப்பிட்டு முடித்து விட வேண்டும்.இரவு தூங்குவதற்கு 2 மணி நேரத்திற்கு முன்பு சாப்பிடுவதால் மார்பக மற்றும் புரோஸ்டேட் கேன்சர் வருவதற்கான ஆபத்து குறைவாக உள்ளதென ஆய்வு கூறுகிறது.

முறையற்ற உணவு பழக்கம் உள்ளவர்களுக்கு புற்றுநோய் வருவதற்கான ஆபத்து 20 சதவீதம் அதிகமாக உள்ளதென ஆய்வு முடிவு கூறுகிறது.

முறையான உணவு பழக்கம் இல்லாதவர்களுக்கு இரவு 10 மணிக்கு மேல் சாப்பிடுவர்களுக்கு அல்லது இரவு நேர வேலை பார்ப்பவர்களுக்கும் உடலின் செரிமான பிரச்சனை தோன்றுகிறது.

முறையற்ற உணவு பழக்கம் லேட் நைட்டில் சாப்பிடுவது போன்ற பழக்க வழக்கத்தால் உடலியல் இயக்கத்தின் வழக்கமான செயல்முறைகள் மாறுவதால் நோய்க்கூறுகள் உருவாகும் இடமாக நம் உடல் மாறிவிடுகிறது.

முறையான உணவுப் பழக்கமும் சரியான தூக்கமும் உள்ள வாழ்வியல் முறையை பழக்கப்படுத்தினால் மட்டுமே நோயற்ற வாழ்வை உறுதி செய்ய முடியும்