வானிலாளர்கள் மர்மமான, சக்தி வாய்ந்த வரைவான ரேடியோ சமிக்ஞைகள் புவியை வந்தடைவதை கண்டுபிடித்துள்ளனர்.
இது அறியப்பட்ட ஆண்டு, மாதம், திகதி கொண்டு FRB 180725A எனப் பெயரிடப்பட்டுள்ளது.
இதில் ஆச்சர்யமான விடயம் யாதெனில் அதிகளவான சமிக்ஞைகள் ரேடியோ அலைகளின் அதிர்வெண்ணில், அதாவது 580 MHz இல் இருப்பதாகும். இதுவே முதலில் அறியப்பட்டுள்ள 700 MHz இலும் குறைவான சமிக்ஞையாகும்.
விஞ்ஞானிகள் இவ்வகை சமிக்ஞைகள் நியுத்திரன் நட்சத்திரங்களிலிருந்து வெளிவரலாம் என அனுமானிக்கின்றனர்.
ஆனாலும் இதுவரையில் இதற்கு காரணமான நிகழ்வை விஞ்ஞானிகளால் இனங்கானமுடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.