பேஸ்புக்கின் டேட்டிங் ஆப்பிளிக்கேஷன் மீதான பரிசோதனைகள் ஆரம்பம்…

இரண்டு மாதங்களுக்கு முன்னர் டேட்டிங் வசதியினை அறிமுகம் செய்யவுள்ளதாக F8 மாநாட்டில் பேஸ்புக் நிறுவனம் அறிவித்திருந்தது.

இவ்வாறான நிலையில் தற்போது குறித்த அப்பிளிக்கேஷன் மீதான உள்ளக பரிசோதனைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த அப்பிளிக்கேஷனில் முக்கியமாக டேட்டிங்கில் ஈடுபடுபவர்கள் தொடர்பான தகவல்கள் நண்பர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு தெரியாமல் பாதுகாக்கும் வசதி உள்ளடக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான தகவல் டுவிட்டர் தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

எனினும் இவ் வசதி பொதுமக்களின் பயன்பாட்டிற்கு எப்போது அறிமுகம் செய்யப்படும் என்ற தகவல் வெளியிடப்படவில்லை.