விரைவில் தாயாகவுள்ளதாக இந்திய நட்சத்திர டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா டுவிட்டர் மூலம் தகவல் தெரிவித்துள்ளார்.
சர்வதேச டென்னிஸ் அரங்கில் இந்தியாவை பெருமைப்படுத்திய வீராங்கனை சானியா மிர்சா. கடந்த 2010ல் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயிப் மாலிக்கை திருமணம் செய்து கொண்டார். பாகிஸ்தான் வீரரை திருமணம் செய்து கொண்ட போதும், தொடர்ந்து இந்தியாவுக்காக விளையாடி வருகிறார்.
இவர் விரைவில் தாயாகவுள்ளதாக சமீபத்தில் டுவிட்டர் மூலம் தெரிவித்துள்ளார். இந்நிலையில் தற்போது 7 மாதம் கர்ப்பமாக உள்ள சானியா, டென்னிஸ் விளையாடியுள்ளார்.
இந்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில், ‘சொன்னேன்ல…. என்னால் விலகி இருக்க முடியாது என்று. ஆனால் தற்போது ஓட சக்கரங்கள் தேவை.’ என அதில் குறிப்பிட்டுள்ளார்.