மனித பாதத்தை ஒத்த அதிசய உருளைக்கிழங்கு

பிரேஸில் நாட்டில், சென்டா கதரினா பகுதியில் அதிசய உருளைக்கிழங்கொன்று   கிடைக்கப்பெற்றுள்ளது.

குறித்த உருளைக்கிழங்கு மனிதர்களின் பாதத்தைப் போல் தோற்றம் அளிப்பதோடு அதில் விரல்களும், முடிகளும் காணப்படுகின்றமை சிறப்பம்சமாகும். மனித பாதத்தில் 5 விரல்களே காணப்படும். ஆனால் குறித்த கிழங்கில் 5 விரல்களுக்கு மேலதிகமாக ஒரு சிறிய விரலும் காணப்படுகின்றது.

சுமார்  8 கிலோகிராம் நிறையுடைய இந்த கிழங்கு பிரேஸில் நாட்டைச் சேர்ந்த மார்லி என்பவருடைய  தோட்டத்தில் இருந்து கிடைக்கப்பெற்றுள்ளது.

4EEE732100000578-6040685-image-a-2_1533753612881 மனித பாதத்தை ஒத்த அதிசய உருளைக்கிழங்கு மனித பாதத்தை ஒத்த அதிசய உருளைக்கிழங்கு 4EEE732100000578 6040685 image a 2 1533753612881

இவ்வாறு கிடைக்கப்பெற்ற அதிசய கிழங்கு தோட்டத்தின் உரிமையாளர் குறித்து மார்லி தெரிவிக்கையில்,

இந்த வகையான அதிசயத்தக்க கிழங்கை நான் எங்கும் கண்டதில்லை. நாங்கள் சுமார் 6 வருடங்களாக தோட்டம் செய்து வருகின்றோம். வீடடுக்கு பின்புறத்தில் கிழங்குடன் வேறு மரக்கறி தோட்டமும் வைத்துள்ளோம்.

4EEE730C00000578-6040685-image-a-1_1533753599138 மனித பாதத்தை ஒத்த அதிசய உருளைக்கிழங்கு மனித பாதத்தை ஒத்த அதிசய உருளைக்கிழங்கு 4EEE730C00000578 6040685 image a 1 15337535991381

நாம் இந்த கிழங்கை அறுவடை செய்யும் போது மிகவும் பயமாகவும் ஆச்சரியமாகவும் இருந்தது. நாம் எமது அன்றாட  உணவுத் தேவைக்காகவே இவற்றை பயன்படுத்துகின்றோம். எவ்வாறு இதனை உண்பதென்று புரியவில்லையெனத் தெரிவிக்கின்றார்.