திமுக தலைவர் மு.கருணாநிதி கடந்த ஆகஸ்ட் 7-ம் தேதி உயிரிழந்தார். இவரது உடல் பொது மக்களின் அஞ்சலிக்காக நேற்று ராஜாஜி அரங்கத்தில் வைக்கப்பட்டு இருந்தது. திரையுலக பிரபலங்கள் பலரும் திரண்டு வந்து கலைஞர் கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தினார்கள்.
ஆனால் சிம்பு இரண்டு முறை கருணாநிதி அவர்களுக்கு அஞ்சலி செலுத்த முயன்றும் அவரை அங்கிருந்தவர்கள் அனுமதிக்காதது ஏன் என்பது தெரிய வந்துள்ளது. முதலில் சிம்பு கலைஞர் அவர்களுக்கு அஞ்சலி செலுத்த சென்று போது பிரதமர் நரேந்திர மோடி வருகை தந்திருந்தால் அவரை அனுமதிக்கவில்லை.
அதன் பிறகு மீண்டும் ஒரு முறை சிம்பு முயன்ற போது காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வருகை தந்துள்ளார். இதனால் இம்முறையும் சிம்புவை அங்கிருந்தவர்கள் அனுமதிக்க மறுத்துள்ளனர்.