10-ம் நம்பர் வீட்டில் நடந்த லீலைகள் தெரியாதா? நடிகரை விளாசிய ஸ்ரீ ரெட்டி..

பட அதிபர்கள், நடிகர்கள் மீது புகார் கூறி வரும் ஸ்ரீரெட்டி, தற்போது தெலுங்கு நடிகர் ஒருவரை பற்றி மிகவும் கெட்ட வார்த்தைகளால் விளாசியுள்ளார். #SriReddy #SriLeaks

சமீபத்தில் அவர் தமிழ் திரையுலகை சேர்ந்த நடிகர்கள் ஸ்ரீ காந்த், ராகவா லாரன்ஸ், இயக்குனர்கள் சுந்தர் சி., ஏ.ஆர்.முருகதாஸ் மீது பாலியல் புகார் தெரிவித்தார். பட வாய்ப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் அழைத்தவர்களுடன் படுக்கைக்கு சென்றதாக கூறினார்.

இந்நிலையில் அவர் தற்போது தெலுங்கு நடிகரும், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் நிர்வாகியுமான பிருத்விராஜ் மீது புகார் தெரிவித்துள்ளார்.

பிருத்வி பற்றி அவர் சமூக வலைதளத்தில் கூறியிருப்பதாவது “காமெடி பிருத்வி… ஐதராபாத் பஞ்சரா ஹில்ஸ் ரோடு 10-ம் நம்பர் வீட்டில் நீங்கள் செய்த லீலைகள் அனைவருக்கும் தெரியும். அமெரிக்க கலை நிகழ்ச்சிகளுக்கு சென்ற நடிகைகளிடம் நீங்கள் தவறாக நடந்து கொண்டுள்ளீர்கள். இந்த லட்சணத்தில் உங்களுக்கு எம்.எல்.ஏ. டிக்கெட் ஒரு கேடா?” என்று கூறி கெட்ட கெட்ட வார்த்தைகளால் திட்டியுள்ளார்.

இது ஆந்திர அரசியல் மற்றும் சினிமா வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.