பிக்பாஸ் வீட்டில் இருக்கும் நடிகர் மகத் எந்த தவறும் செய்யவில்லை என்று நடிகர் சிம்பு கூறியிருக்கிறார்.
இதுகுறித்து சிம்புவிடம் கேட்டபோது ’அவர் வெளிப்படையாக தானே இருக்கார். அதுதான் எல்லோருக்கும் பிரச்சினையா இருக்கு. அவனுக்கு கேர்ள் பிரெண்ட் இருக்கு’னு எல்லோரும் சொல்லுகிறார்கள்.
நமக்கு ஒரு கேர்ள் பிரெண்ட் இருந்து வேறு ஒரு பொண்ணை தொட்டால் நம் கேர்ள் பிரெண்ட் கோபத்தில் அறை விடுவார். அவரது கேர்ள் பிரெண்ட் அப்படியில்லை. அது ஏன் நமக்கு கஷ்டமாக இருக்குனு எனக்குப் புரியலை. பிடிக்காத ஒரு பொண்ணை அவன் கையைப் பிடிச்சு இழுத்தா, அதைத் தப்புன்னு சொல்லலாம். அவன் அப்படி எதுவுமே பண்ணலையே..?” என்று மகத்துக்கு ஆதரவாக பேசி இருக்கிறார்.