தென்னிந்திய நடிகையான த்ரிஷா இன்று கருணாநிதியின் சமாதியில் சென்று அஞ்சலி செலுத்தியுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன.
திமுக தலைவரும் முன்னாள் முதல்வருமான கருணாநிதி நேற்று முன்தினம் (ஆகஸ்ட் 7) மாலை 6.10 மணிக்கு உடல்நிலை குறைபாடு மற்றும் வயது முதிர்வு காரணமாக கலாமானார்.
நேற்று ராஜாஜி அரங்கில் பொது மக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு இருந்த கலைஞரின் உடலுக்கு பெரும்பாலான திரையுலக பிரபலங்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி இருந்தனர். ஆனால் நடிகைகள் யாரும் கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்த வரவில்லை.
இந்நிலையில் தற்போது திரிஷா கருணாநிதியின் சமாதிக்கு சென்று மலர் தூவி கலைஞருக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார்.