உங்கள் கைப்பேசி தொலைந்து விட்டதா ? கவலையை விடுங்கள்….. தரவுகளை அழித்து விட இலகுவான வழி இதோ!!

அண்ரொயிட் தொலைபேசிகளில் கையில் தொலைபேசி இல்லாமலே தரவுகளை அழிக்கும் வசதியினை அந் நிறுவனம் அறிமுகப்படுத்தவுள்ளது.இந்த வசதியானது தொலைபேசி தொலைந்தால் கூட வாடிக்கையாளர்கள் தமது தனிப்பட்ட தரவுகளை ஏனையர்களின் கைகளுக்கு செல்லவிடாமல் பாதுகாக்க வழிசமைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இதற்காக அறிமுகப்படுத்தப்படவுள்ள செயலியினை எவ்வாறு பயன்படுத்துவது என பார்க்கலாம்.முதலில் android.com/find  என்ற தளத்திற்கு செல்ல வேண்டும். அதன் பின்னர் இனி உங்களது கூகுள் அக்கவுன்ட்டில் சைன் இன் செய்ய வேண்டும்.தொடர்ந்து நீங்கள் பயன்படுத்திய சாதனங்களின் பட்டியலை பார்க்க முடியும். ஒருவேலை ஒன்றுக்கும் மேற்பட்ட சாதனத்தை பயன்படுத்தியிருந்தால், திரையின் மேல் காணப்படும் சாதனத்தை கிளிக் செய்ய வேண்டும். இனி, சாதனம் எங்கிருக்கிறது என்பதை பார்க்க முடியும்.இவ்வாறு நீங்கள் செய்த பின்னர் உங்களது சாதனத்தை இங்கு பார்க்க முடியாமல் போனால், இறுதியாக சாதனம் இருந்த இடம் காண்பிக்கப்படும்.இனி திரையில் இரண்டு வழிமுறைகள் காணப்படும் – Sound, Lock and Eraseஇதில்  Sound வழிமுறையை கிளிக் செய்தால் உங்களது சாதனம் இருந்த இடத்திலேயே சத்தத்தை ஐந்து நிமிடங்களுக்கு எழுப்பும்.

சாதனம் சைலன்ட் மோடில் வைக்கப்பட்டிருந்தாலும் இந்த அம்சம் கச்சிதமாக வேலை செய்யும்.ஒருவேலை  Sound வழிமுறையை கிளிக் செய்தால் உங்களது சாதனம் லொக் செய்யப்பட்டு விடும். இறுதியாக ERASE   வழிமுறையினை கிளிக் செய்தால் உங்களது சாதனத்தில் உள்ள அனைத்து தரவுகளும் அழிக்கப்பட்டு விடும். என அந் நிறுவனம் தனது புதிய செயலி குறித்து தெளிவான விளக்கத்தை முன்வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.