கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில் கலந்து கொண்டு கடந்த வாரம் வீட்டை விட்டு வெளியேறியவர் ஷாரிக்.
50 நாட்கள் இருந்த ஷாரிக் நடிகையான ஐஸ்வர்யாவுடன் நெருக்கமாக இருந்து வந்தார். இவர்களுக்கு இடையே காதல் கூட மலர்ந்து விட்டதாக நெட்டிசன்கள் கூறி வந்தனர்.
மேலும் பாலாஜி மீது குப்பை கொட்டியதால் ஐஸ்வர்யாவின் பெயர் வெளியில் மிகவும் டேமேஜ் ஆகி இருந்தது. இந்நிலையில் ஷாரிக் அளித்திருந்த பேட்டி ஒன்றில் ஐஸ்வர்யா வெளியேறியதும் முதலில் அவரை சந்தித்து வெளியில் நடப்பதை பற்றி அவருக்கு அறிவுரை வழங்குவேன் என கூறியுள்ளார். இதை தவிர வேறு எதையும் கூறவும் மாட்டேன் எனவும் கூறியுள்ளார்.