தமிழ் சினிமாவில் தல அஜித் மற்றும் யுவன் கூட்டணி மீண்டும் எப்போது அமையும் என எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. காரணம் மங்காத்தா படத்தில் ரசிகர்களை கொண்டாட வைத்த யுவனின் BGM தான்.
இந்நிலையில் தற்போது மீண்டும் மங்காத்தா BGM இசையால் ரசிகர்களை கொண்டாட வைத்துள்ளார் யுவன். அதாவது ஹரிஷ் கல்யாண் மற்றும் ரைசா நடிப்பில் இன்று வெளியாகியுள்ள பியார் பிரேம காதல் படத்தில் யுவன் தயாரிப்பு நிறுவனத்தின் பெயர் வரும் போது மங்காத்தா BGM ஒளிபரப்பாகியுள்ளது.
இதனால் தல ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். மேலும் விசில் சத்தத்தால் தியேட்டர்களையே அதிர வைத்துள்ளனர்.