கனடா நாட்டின் நியூ புருன்ஸ்விக் மாகாணத்திற்குட்பட்ட பிரடெரிக்டான் நகரில் உள்ள குடியிருப்பு பகுதியில் இன்று மர்மநபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் உயிரிழந்தனர்.
கனடா நாட்டின் கிழக்கு பகுதியில் நியூ புருன்ஸ்விக் என்னும் கடலோர மாகாணம் அமைந்துள்ளது. இந்த மாகாணத்திற்குட்பட்ட பிரடெரிக்டான் நகரில் உள்ள குடியிருப்ப பகுதியில் உள்ளூர் நேரப்படி இன்று காலை 7 மணியளவில் (இந்திய நேரப்படி மாலை சுமார் 5.30 மணி) துப்பாக்கியால் சுடும் சப்தம் கேட்டது.
இதனால் பீதியடைந்த மக்கள் வீட்டின் கதவுகளை தாழிட்டுகொண்டு போலீசாருக்கு தகவல் அளித்தனர். ஆம்புலன்ஸ் வாகனங்களுடன் விரைந்துவந்த போலீசார், அப்பகுதியில் நடத்திய தேடுதல் வேட்டையில் 4 பிரேதங்கள் கண்டெடுக்கப்பட்டதாக தெரிவித்துள்ளனர்.
துப்பாக்கியால் சுட்ட ஒருவர் கைது செய்யப்பட்டதாகவும், உயிரிழந்தவர்கள் யார் என்பது பற்றிய உடனடி தகவல் ஏதும் வெளியாகவில்லை என்று உள்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன.