பிரேசிலில் இடம்பெற்றுவரும் குடும்ப வன்முறைகளில் மட்டும் கடந்த வருடம்63.880 பேர் கொல்லபட்டுள்ள அதிர்ச்சி புள்ளிவிபரங்கள் வெளியானது.
இந்தப்பின்னணியில் கொடுரமாக கணவன் ஒருவர் தனது மனைவியை இருபது நிமிடங்களுக்கு மேல் அடித்து துன்புறுத்தியதால் அவர் நான்காம் மாடியில் இருந்து விழுந்து தற்கொலை செய்த அதிர்ச்சியான காணொளி காவற்துறையினரால் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த காட்சி பிரேசிலியர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது 29 வயதான பெண் சட்டத்தரணியான ராட்டினே ஸ்பிட்ஸ்னர், 32 வயதான தனது கணவர் லூயிஸ் பிலிப்பே என்பவரால் வாகனம் முதல் மின்தூக்கியில்(லிப்ட்) இருந்து வெளியேறுவது வரை தாக்கபட்டார்.
அதன்பின்னர் நான்காவது மாடியில் இருந்த விழுந்து பலியானார். இந்த சம்பவங்கள் யாவும் முன்னர் அந்த கட்டிடத்தில் இருந்த கமராக்கள் மூலம் படம்பிடிக்கப்பட்டுள்ளன. அவர் மாடியில் இருந்த விழுந்த காட்சி தணிக்கை செய்யப்பட்டுள்ளது. தற்போது அவரது கணவர் கொலைகுற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.