க.பொ.த உயர்தரப் பரீட்சை நிலைய பொறுப்பதிகாரி திடீர் மரணம்….!! அதிர்ச்சியில் உறைந்து போன மாணவர்கள்……!!

பரீட்சை நிலையத்தில் கடமையாற்றி வந்த, பரீட்சை நிலையப் பொறுப்பாளர் திடீரென மாரடைப்பினால் உயிரிழந்துள்ளார்.

கேகலை – ஹெட்டிமுல்ல புதிய கனிஸ்ட பாடசாலையின் கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை நிலைய பொறுப்பாளரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.இதனால் பரீட்சை எழுத வந்த மாணவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

கேகாலை புனித மரியா தமிழ் வித்தியாலயத்தின் அதிபரான 57 வயதான கதிரமலே ஆறுமுகம் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.மாரடைப்பு ஏற்பட்டதனைத் தொடர்ந்து கேகாலை வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்ட போது குறித்த அதிபர் உயிரிழந்துள்ளார்.