பெண்களின் தற்கொலையைத் தவிர்ப்பதற்கான திட்டம்” எனும் தொனிப்பொருளில் நுண்நிதி நிறுவனத்தினரை ஊருக்குள் வரவேண்டாம் என்ற பதாகை கட்டி எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர். வவுனியா சாந்தசோலைக் கிராம மாதர்சங்கத்தினார்.கடந்த வாரமளவில் வவுனியா சாந்தசோலை கிராம மாதர்சங்கத்தால். நுண்நிதி நிறுவன ஊழியர்கள் திருப்பி அனுப்பபட்டதுடன் கிராமத்திற்குள் வருகைதந்து கடன்களை வழங்கவேண்டாம் எனத் தெரிவித்து முரண்பட்டிருந்தனர்.
இதனால் ஊழியர்களுக்கும் கிராமப் பெண்களுக்கும் இடையில் கருத்து முரண்பாடு ஏற்பட்டிருந் தது.கிராமத் துக் குள் வருகைதந்து கடன்களை வழங்கவோ,அறவிடவோ வேண்டாம் என்றும் உங்களது அலுவலகத்தில் வைத்து அறவிடுமாறும் பெண்களால் கூறப்பட்டிருந்தது. இதனால் நிதி நிறுவன ஊழியர்கள்திரும்பிச்சென்றிருந்த னர்.
இதன் அடுத்தகட்டமாக கிராம மாதர் சங்கத்தினரால் 11 நிதி நிறுவனங்களுக்கு கிராமங்களுக்குள் வருகைதரவேண்டாம் எனக் கடிதம் மூலம் அறியத்தரப்பட்டுள் ளது. இந்நிலையில் நேற்றுமுன்தினம் சாந்த சோலைப் பகுதியில் பதாகை ஒன்றும் காட்சிப்படுத்தப்பட் டுள் ளது.கிராம இளைஞர்கழகம்,சனசமூகநிலையம்,மாதர்சங்கம் என்பனவற்றின் கலந்துரையாடலின் பிரகாரம் கிராமத்தின் முகப்புப் பகுதியில் குறித்த பதாகை காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.