கருணாநிதியின் மரணத்துடன், தமிழ் நாட்டில் “இசட் பிளஸ்” (Z Plus) பாதுகாப்பு முடிவுக்கு வந்துள்ளதாக இந்திய பாதுகாப்பு துறைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழகத்தின் முன்னாள் முதல்வரும் தி.மு.க. தலைவருமான மு.கருணாநிதி மரணமடைந்ததால் “இசட் பிளஸ்” (Z Plus) பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, இதனையடுத்து தமிழ்நாட்டில் வேறு எவருக்கும் இப்போது “இசட் பிளஸ்” (Z Plus) பாதுகாப்பு இல்லை என தெரிவிக்கப்பட்டள்ளது.
விடுதலைப் புலிகளின் அச்சுறுத்தல் காரணமாக முன்னாள் முதல்- அமைச்சர் ஜெயலலிதாவுக்கும், தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கும் ஏற்கனவே மத்திய அரசின் “இசட் பிளஸ்” (Z Plus) கமாண்டோ பாதுகாப்பு வழங்கப்பட்டு இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த 2016-ம் ஆண்டு ஜெயலலிதா மரணம் அடைந்ததை தொடர்ந்து அவருக்கு வழங்கப்பட்டிருந்த “இசட் பிளஸ்” (Z Plus) பாதுகாப்பு விலக்கிக் கொள்ளப்பட்டது.தி.மு.க. தலைவர் கருணாநிதி கடந்த 7-ந்தேதி மரணம் அடைந்ததை தொடர்ந்து அவருக்கு வழங்கப்பட்டிருந்த “இசட் பிளஸ்” (Z Plus) பாதுகாப்பு படையும் விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் இப்போது யாருக்கும் “இசட் பிளஸ்” (Z Plus) பாதுகாப்பு இல்லை என குறிப்பிடப்படுகிறது.
“இசட் பிளஸ்” (Z Plus) பாதுகாப்பு யாருக்கு கொடுக்க வேண்டும் என்பதை மத்திய உளவுப்பிரிவு தக்க ஆதாரங்களை சேகரித்து, அவர்களுக்கு நிலவும் அச்சுறுத்தல்களை பட்டியலிட்டு, உள்துறை அமைச்சகத்துக்கு வழங்கும்.
அதை மத்திய அரசு பரிசீலித்து தான் “இசட் பிளஸ்” (Z Plus) பாதுகாப்பை வழங்குகிறது.
இந்த அடிப்படையிலேயே ஜெயலலிதாவுக்கு 1991-ம் ஆண்டில் இருந்தும், கருணாநிதிக்கு 1997-ம் ஆண்டில் இருந்தும் “இசட் பிளஸ்” (Z Plus) பாதுகாப்பு கொடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது..