தேர்தல் அறிவித்தால்தான் யாருடன் கூட்டணி என்று அறிவிப்பேன் – விக்கி

வடமாகாணசபை தேர்தலில் தம்முடன் இணைந்து போட்டியிடுமாறு பலரும் கேட்கிறார்கள் ஆனால் மாகாணசபை தேர்தலுக்கு இன்னும் காலம் இருக்கிறது.

ஆகவே எவருடன் சேருவது என்பதை தேர்தல் கால த்திலேயே தீர்மானிப்பேன் இப்போது அது தேவையில்லை. என வடமாகாண முதல மைச்சர் சீ.வி.விக்னேஷ்வரன் கூறியுள்ளார்.

நேற்றைய தினம் மாலை யாழ்ப்பாணம் கைதடியில் உள்ள வடக்கு மாகாண பேரவை செயலகத்தில் குடாநாட்டில் ஏற்பட்டுள்ள வன்முறைச் சம்பவங்கள் தொடர்பாக பொலிஸாருடன் கலந்துரையாடல் இடம்பெற்றிருந்தது.

இக் கலந்துரையாடலையடுத்து இடம்பெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் செய்தியாளர்களால், நீங்கள் தம்முடன் கூட்டு சேர்ந்து அடுத்த மாகாண சபை தேர்தலில் போட்டியிட வேண்டும் என தமிழ் தேசிய மக்கள் முன்னனி கோரிக்கை விடுத்துள்ள நிலையில் இதற்கு பதில் என்ன கூறுகின்றீர்கள் என வினவிய போதே அவர் இதனை தெரிவித்தார்.

இங்கு அவர் மேலும் கூறுகையில்,
என்னை பலரும் அடுத்த மாகாண சபை தேர்தலில் போட்டியிட தம்மோடு வருமாறு அழைக்கின்றார்கள். ஆனால் இது தொடர்பாக நான் அந்த நேரத்திலேயே முடிவெடுப்பேன்.

அத்துடன் தற்போது அடுத்த மாகாண சபை தேர்தலை எப்போது நடத்துவது என முடிவில்லாத நிலையில் அதற்கு இன்னமும் ஆறு ஏழு மாதம் தாமதமாகலாம்.

எனவே இது தொடர்பாக சிந்திப்பதற்காக நீண்ட காலம் இருக்கிறது. இந்நிலையில் தமிழ் தேசிய மக்கள் முன்னனியுடன் நான் கூட்டு வைப்பதா இல்லையா என்பது தொடர்பாக சிந்திப்பேன் என்றார்.

“குள்ள மனிதர்களின் பின்னணியில் அரசியல்வாதிகள்”?

kilaviias தேர்தல் அறிவித்தால்தான் யாருடன் கூட்டணி என்று அறிவிப்பேன் – விக்கி தேர்தல் அறிவித்தால்தான் யாருடன் கூட்டணி என்று அறிவிப்பேன் – விக்கி kilaviiasகுள்ள மனிதர்கள் என்பது இல்லாத விடயம். அதன் பின்னால் அரசியல் பின்னணிகள் இருகின்றன என தாம் நம்புவதாக பொலிஸார் தம்மிடம் தெரிவித்ததாக வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

யாழில்.முதலமைச்சரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நேற்று வெள்ளிகிழமை முதலமைச்சர், வடமாகாண சிரேஸ்ட பொலிஸ் மா அதிபர் ரொஷன் பெனர்ண்டோ, யாழ்.மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் பாலித பெனர்ண்டோ உள்ளிட்ட பொலிஸ் உயர் அதிகாரிகளை சந்தித்து யாழில்.நடைபெறும் வன்முறை சம்பவங்கள் மற்றும் சட்டவிரோத செயற்பாடுகளை கட்டுப்படுத்துவது தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.

அதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே முதலமைச்சர் அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில்,

குள்ள மனிதர்களை தாம் நேரில் கண்டோம் என எவரும் தம்மிடம் முறைப்பாடு செய்யவில்லை என பொலிஸார் தெரிவிக்கின்றனர். அதனால் குள்ள மனிதர்கள் தொடர்பான செய்திகள் அரசியல் பின்னணியால் உருவானது என பொலிஸார் சந்தேகிக்கின்றார்கள்.

அதேவேளை யாழில்.இடம்பெறும் மணல் கடத்தல்கள், போதை பொருள் கடத்தல்கள், வீதி விபத்துக்கள் ஆகியவற்றை கட்டுபடுத்துவது தொடர்பில்  கலந்துரையாடப்பட்டது என மேலும் தெரிவித்தார்.