வேகமாக உடல் எடையைக் குறைப்பதற்கு தேன் மட்டும் இருந்தால் போதும்…. தெரியுமா உங்களுக்கு?

உடல் எடையைக் குறைக்க நினைத்தால் இயற்கை வழிகளை குறிப்பாக பக்க விளைவுகள் இல்லாத வழிகளைப் பின்பற்றி முயற்சிக்க வேண்டும்.
தேன் எடை குறைப்பதற்காக, இருமல் நிற்பதற்காக என பல விதங்களில் மிகவும் தேவையானது. அந்த அளவுக்கு மிக சிறந்த மருத்துவ குணங்களை கொண்டது.


காய்ச்சிய தேன், காய்ச்சாத தேன் என்று ஒரு வகை உண்டு. தேனில் உள்ள பூவின் மணம் போவதற்கு, இரும்பை காய வைத்து அதை தேனில் வைப்பார்கள். இது சற்று நீர்த்திருக்கும். இவற்றை இரண்டு ஆண்டுகளுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

நாம் சாப்பிடும் உணவில் சர்க்கரைக்கு பதில் தேன் கலந்து சாப்பிட்டால் உடலுக்கு நல்லது. இரவில் தூங்கும் முன் சூடான பசும் பாலில் தேன் கலந்து குடித்தால், நல்ல ஞாபக சக்தி உண்டாகும்.முகத்தில் வறட்சி அதிக கொழுப்பு, குடல் சம்பந்தப்பட்ட பிரச்சனை எதுவாக இருந்தாலும், தேன் சாப்பிட்டால் சரியாகிவிடும். காலையில் வெறும் வயிற்றில் தேனைச் சாப்பிட்டால், தேவையில்லாத கொழுப்பு கரைந்துவிடும்.

தேனுடன் பலாப்பழம் சாப்பிட முகம் பொலிவாகும். உடலில் நீர் அதிகமாக இருப்பவர்களுக்கு தேன் ஒரு அருமருந்தாகும். வெந்நீரில் தேனைக் கலந்து பயன்படுத்தினால், தேனில் உள்ள மருத்துவ குணங்கள் நமக்கு கிடைக்காது.

தேனை கேரட் சாறுடன் கலந்து காலை ஆகாரத்திற்கு ஒரு மணி நேரத்திற்கு முன் பருகினால் கண் பார்வை விருத்தியடையும். சரியளவு தேன் மற்றும் இஞ்சி சாறு கலந்து அருந்தினால் இருமல், தொண்டை வலி, மார்பு ,சளி, மூக்கு ஒழுகுதல் மற்றும் மூக்கடைப்பு போன்ற உபாதைகளில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.