கலைஞர் என்றவுடன் நம் மனதில் தோன்றும் அவரது தோற்றத்தில் மஞ்சள் துண்டும் தவிர்க்க முடியாத ஒன்றாக மாறிவிட்டது.
அதே மஞ்சள் துண்டு பல விமர்சனங்களையும் பெற்றது. தன்னை நாத்திகன், பகுத்தறிவாளன் என்று பிரகடனம் செய்கின்றவர்கள் மீது வைக்கப்படும் விமர்சனங்களில் இது ஒரு வகை.
“கலைஞரின் புகைப்படங்களைப் பார்த்தால் நீண்ட காலமாக அவருடைய உடை அமைப்பு அவ்வப்போது மாற்றிக் கொள்ளப்படுவது புரியும்.
மந்திரிகுமாரி படம் வெளிவந்த காலத்தில் வேட்டியும் அரைக்கை வைத்த புஷ் கோட் என்ற சட்டை (இப்போதைய சபாரி போல்).
பின்னர் கைத்தறிப் பட்டில் பல வண்ணங்களில் கழுத்தில்லாத ஜிப்பா அதற்கேற்ற வண்ண (மாட்சிங்) மேல் துண்டு. கொஞ்ச காலம் பின்னர், பருத்தித் துணியில் வெள்ளை ஜிப்பா, கறுப்பு, சிவப்புக் கரையுடன் நீண்ட மேல் துண்டு.
அமைச்சரான பின் காலர் வைத்த முழுக்கை சட்டை, வெள்ளைத் துண்டு என மீண்டும் ஒரு மாற்றம்.
வெள்ளைச் சட்டையுடன் பல்வேறு வண்ணங்களில் சால்வைகள் – துண்டுக்குப் பதிலாக. இப்போது மஞ்சள் சால்வை. இராசிப்படி (மூடநம்பிக்கைப்படி) என்றால் எப்போதுமே ஒரே நிறம்தான் அணிவார்கள்” என்று விளக்கம் கொடுத்தார் திருச்சி செல்வேந்திரன்.