செங்காங் பொது மருத்துவமனை இம்மாதம் 18ஆம் தேதியன்று திறக்கப்படவிருக்கிறது. அதிகரித்து வரும் மூப்படையும் மக்கள் தொகையைக் கருத்தில் கொண்டு கட்டப்படும் புதிய பொது மருத்துவமனைகளில் செங் காங் மருத்துவமனையும் ஒன்று. அதனுடன் இணைக்கப்பட்டிருக் கும் செங்காங் சமூக மருத்துவ மனை பத்து நாட்கள் கழித்து இம்மாதம் 28ஆம் தேதியன்று திறக்கப்படும். பொது மருத்துவ மனையில் உள்ள நோயாளிகளை மறுவாழ்வு சிகிச்சைக்கு உட்படுத்த இந்தத் தாமதம் தேவைப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டது. நேற்று நடைபெற்ற செங்காங் சுகாதார விழாவில் இந்த இரு மருத்துவமனைகளின் திறப்பு தேதிகளை அறிவித்த சுகாதார அமைச்சர் கான் கின் யோங், “வட கிழக்கில் வசிக்கும் குடியிருப்பாளர் களுக்கு எளிதில் தரமான, கட்டுப் படியாகக்கூடிய சுகாதாரப் பராம ரிப்பு கிடைக்க வழி செய்யும்,” என் றார்.
இந்த இரு மருத்துவமனைக ளும் பல்வேறு நிபுணத்துவ சிகிச்சை நிலையங்களுடன் அணுக்கமாகச் செயல்படும். “தேசிய தோல் சிகிச்சை நிலை யம், சிங்கப்பூர் தேசிய கண் சிகிச்சை நிலையம், தேசிய புற்று நோய் சிகிச்சை நிலையம் முதலிய நிபுணத்துவ சிகிச்சை நிலையங் களுடன் செங்காங் மருத்துவ மனை ஏற்படுத்திக்கொண்டிருக் கும் பங்காளித்துவத்தின் மூலம் வடகிழக்கு வட்டாரவாசிகளுக்கு எளிதில் நிபுணத்துவ சிகிச்சைகள் கிடைக்கும். “கேகே சிறுவர், மகளிர் மருத் துவமனையின் நிபுணர்கள் செங் காங் மருத்துவமனையில் மகப்பேறு பராமரிப்பை வழங்குவார்கள். ஆக, இங்குள்ள மக்கள் கேகே மருத்துவமனைக்குச் செல்ல வேண்டியது இல்லை,” என்றார் செங்காங் மருத்துவமனையின் தலைமை நிர்வாகி பேராசிரியர் கிறிஸ்தஃபர் செங். செங்காங் எம்ஆர்டி நிலையத் துக்கு மிக அருகில் நடக்கும் தூரத்தில் உள்ள செங்காங் மருத் துவமனை அங்குள்ள எல்ஆர்டி நிலையத்தின் இரண்டாம் மாடியு டன் இணைக்கப்பட்டுள்ளது.