யாழ்பாணத்தில் நடைபெற்ற சிவில் பாதுகாப்பு கூட்டத்தில் சிறிலங்கா ராணுவம் மற்றும் காவல்துறை அதிகாரிகள் முன்னிலையில் பலர் தமது சாட்சிகளை பதிவு செய்திருந்தார்கள்.
யாழ் மர்ம மனிதர்கள் விவகாரம் – சிறிலங்கா காவல்துறை வெளியிடும் அதிர்ச்சித் தகவல்
யாழ்ப்பாணம் அராலி உட்பட அதனை அண்டியப் பகுதிகளில் வாழும்மக்களை அண்மைய நாட்களாக கடும் பீதிக்கு உட்படுத்தியுள்ள மர்மமான குள்ள மனிதர்களின் நடமாட்டம் என்பது ஊடகங்களினால் திட்டமிட்டு கட்டவிழ்த்துவிடப்பட்ட புரளியென தெரிவித்திருக்கும் பொலிசார், இந்த புரளிக்குப் பின்னால் அரசியல் பின்னணியொன்று இருப்பதாகவும் சந்தேகம்வெளியிட்டிருக்கின்றனர்.
குள்ள மனிதர் விவகாரம் உள்ளிட்ட யாழ் குடாநாட்டில்தீவிரமடைந்துள்ள வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் வட மாகாண முதலமைச்சர்சீ.வி.விக்னேஸ்வரன் தலைமையில் ஓகஸ்ட் 10 ஆம் திகதியான நேற்றைய தினம் மாலை ஏற்பாடுசெய்யப்பட்டிருந்த விசேட கலந்துரையாடலில் கலந்துகொண்ட யாழ் மாவடட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தலைமையிலான உயர் பொலிஸ் அதிகாரிகள் மர்ம மனிதர்களின் நடமாட்டங்கள் அதிகரித்திருப்பதாக மக்கள் கூறும் தகவல்களை நம்பமுடியாது என்று தெரிவித்து இந்தக் குற்றச்சாட்டுக்களை முன்வைத்திருக்கின்றனர்.
வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனின் அலுவலகத்தில்ஓக்ஸ்ட் 10 ஆம் திகதி வெள்ளிக்கிழமை மாலை இந்த விசேட கலந்துரையாடல் நடைபெற்றது.
இதில் யாழ்மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் உட்பட சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் கலந்துகொண்டு, தீவிரமடைந்துள்ளவன்முறைகள் மற்றும் போதைப்பொருள் பாவணை உள்ளிட்ட குற்றச்செயல்களை தடுக்க பொலிசார் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள்குறித்து தெளிவுபடுத்தியுள்ளனர்.
இதன்போது அராலியில் இரவு வேளைகளில் மக்களை அச்சுறுத்திவரும்மர்ம மனிதர்கள் தொடர்பிலான பிரச்சனை எழுந்த போது, மர்ம மனிதர்களை நேரில்கண்டவர்கள் எவரும் இல்லை என்றும் இது ஒரு ஊடகங்களினால் கடடவிழ்த்துவிடப்பட்ட வதந்தியாகவே இருப்பதாகவும் பொலிஸார்தெரிவித்ததாக முதலமைச்சர் விக்னேஸ்வரன் சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கூறினார்.