அவுஸ்திரேலியாவில் திருமணமான இரண்டு நாளில் புதுமண தம்பதிக்கு லாட்டரியில் $671,513 பரிசு விழுந்தது அவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
Cairns நகரை சேர்ந்த இளைஞருக்கும், இளம் பெண்ணுக்கும் சமீபத்தில் திருமணம் ஆனது, இதையடுத்து இருவரும் லாட்டரி சீட்டு ஒன்றை வாங்கினார்கள்.
அந்த சீட்டுக்கு $671,513 பரிசு விழுந்துள்ளது. இந்த விடயம் புதுமண தம்பதியை மகிழ்ச்சியில் திக்குமுக்காட வைத்துள்ளது.
இது குறித்து தம்பதி கூறுகையில், இதுதான் எங்களுக்கு கிடைத்த திருமண பரிசுகளில் சிறந்த பரிசு என கருதுகிறோம்.
பரிசு பணத்தை வைத்து என்ன செய்வது என இன்னும் முடிவு செய்யவில்லை என கூறியுள்ளனர்.