
பூநகரி முக்கொம்பன் சின்னப்பல்லவராயன்கட்டு மக்களுடனான சந்திப்பின் போதே பாராளுமன்ற உறுப்பினர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில் தமிழர் நீண்டகாலமாக ஓர் இலட்சியத்திற்காகவே போராடி வருகின்றோம் அகிம்சை ரீதியாகவும் ஆயுதரீதியாகவும் நாம் எமது உரிமைக்காகவே போராடி வந்துள்ளோம் போரடியும் வருகின்றோம்.நாம் ஒரு தேசிய இனம் எமக்கு என்று தனித்துவமான மரபுகள் கலைகள் பண்பாடுகள் உண்டு. அவற்றை நாம் எவரிடமும் தாரை வார்த்து கொடுக்க முடியாது. அண்மைக்காலமாக சிங்கள அதிகார வர்க்கத்தில் உள்ள தலைமைகள் பலரும் அதிகாரத்தை கைப்பற்ற நினைப்பவர்களும் இவ்வாறான கருத்துக்களை கொண்டிருக்கிறார்கள் என்பதை செய்திகள் வாயிலாக அறிய முடிகிறது. அண்மையில் வடக்கு மாகாண ஆளுநர் அபிவிருத்திக்காக தமிழ் மக்கள் போராட்டம் நடாத்த வேண்டும் என்று கருத்தினை வெளியிட்டிருந்தார். அவரின் கருத்திற்கு பின்னால் நாம் எமது உரிமைகள் பற்றி சிந்திக்காது நாம் இந்த மண்ணிலேயே அடிமைகளாகவும் தாங்கள் தருகின்ற எலும்புத்துண்டு களை கௌவிக்கொண்டு திரிய வேண்டும் என ஆசைப்படுகிறார்கள். அதற்காக அவர் கடந்தகால ஆட்சியில் அவர்கள் எலும்புத்துண்டுகளை கௌவ்விக்கொண்டு திரிந்தவர்களை துணைக்கு அழைத்துக் கொண்டு செல்கிறார் .ஆனால் எமது மக்கள் விழிப்பாகவும் இலட்சியப்பயணத்தடத்தை தவறிடாமல் பயணித்துக் கொண்டே இருக்கிறார்கள என பாராளுமன்ற உறுப்பினர் சி சிறீதரன் அவர்கள் மேலும் தெரிவித்தார்.
குறித்த நிகழ்வில் வடக்கு மாகாண உறுப்பினர் சு.பசுபதிப்பிள்ளை கரைச்சி பிரதேச சபை தவிசாளர் அ.வேழமாலிகிதன் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.