இலங்கையின் அரச துறை பணியாளர்களுக்கு ஓர் மகிழ்ச்சியான செய்தி!!

சம்பள நிர்ணய ஆணைக்குழுவை ஸ்தாபித்தல் தொடர்பான யோசனை நிதி அமைச்சர் மங்கள சமரவீரவினால் இன்று அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இதையடுத்து, குறித்த விடயம் தொடர்பில் அமைச்சரவையில் கலந்துரையாடி தீர்மானம் மேற்கொள்ளப்பட உள்ளது.அரச துறை பணியாளர்களின் சம்பளத்தை அதிகரித்தல் தொடர்பிலும் இன்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்துரையாடப்பட உள்ளதாகவும் அறியமுடிகின்றது.

அரச துறையை சேர்ந்த அனைத்து பணியாளர்களின் சம்பள நிர்ணய முறையில் நிலவும் குறைப்பாடுகளை நிவர்த்தி செய்வது குறித்து ஆராய்வதற்காகவே இந்த சம்பள நிர்ணய ஆணைக்குழு அமைக்கப்படவுள்ளது.புகையிரத பணியாளர்களின் பணிப்புறக்கணிப்பையடுத்து, அரசதுறை பணியாளர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பில் அரசாங்கம் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.