சிராங்கூன் ரோடு ஸ்ரீ வீரமா காளியம்மன் கோயிலின் சுவர் களில் உள்ள வெள்ளி முலாம் பூச்சுகள் துருப்பிடித்திருந்தன, ஏதோ ஒன்று சரியில்லை என்ற சந்தேகத்தை எழ வைத்தது. அந்த முலாம் பூச்சுகளை மாற்ற சுமார் $750,000 செலவழிக்கப்பட்டு இருந்தாலும், அவை ஆதாரபூர் வமாக மாற்றப்பட்டிருப்பது தென் படவில்லை. அதைத் தொடர்ந்து இன்னும் பல சந்தேக அறிகுறிகள் சிறிது சிறிதாகத் தென்படத் தொடங்கின.
தெய்வச் சிலைகளுக்காக நன் கொடையாக வழங்கப்பட்ட ரத்தி னக் கற்கள் காணாமல் போயின. அக்கோயிலுக்கு நன்கொடையாக வழங்கப்பட்ட நிதி, முறையான ஆவணங்களின்றி பூசாரிகளுக்கும் வெளிநாட்டு ஊழியர்களுக்கும் வழங்கப்பட்டது. “தொடக்கத்தில் நாங்கள் இதை அரைகுறை வேலை என்று நினைத்தோம். பிறகுதான், கோயி லின் நிர்வாக முறையில் கடுமையா ன முறைகேடு நடந்திருப்பது எங்களுக்குத் தெரியவந்தது,” என்றார் அக்கோயிலின் முன்னாள் தலைவர் ஒருவர்.
ஸ்ரீ வீரமாகாளியம்மன் கோயிலின் முன்னாள் நிர்வாகக் குழு உறுப்பினர்கள் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழுக்கு அளித்த பேட்டிகளில், சிங்கப்பூரின் ஆகப் பழமைவாய்ந்த கோயில்களில் ஒன்றான இக்கோயிலில் இடம் பெற்று வந்த ஒளிவுமறைவான நடவடிக்கைகள் குறித்துப் பேசி னர். இறுதியில், கோயிலின் நிர்வா க முறையில் தவறு இழைத்து இருப்பதைப் பற்றி அதிகாரிகளிடம் அவர்கள் தெரிவித்தனர். அக்கோயிலின் நிர்வாக முறை யில் கடுமையான முறைகேடு கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து நிர்வாகத் தலைவர் பதவியிலிருந்து திரு சிவகடாட்சத்தை உடனடியாக நீக்க அறநிறுவன ஆணையர் கடந்த திங்கட்கிழமை உத்தரவி ட்டார்.
சிங்கப்பூரின் ஆகப் பழமையான இந்து கோயில்களில் ஒன்றான ஸ்ரீ வீரமாகாளியம்மன் கோயிலில் கடுமையான நிர்வாக முறைகேடு கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து நிர்வாகத் தலைவர் பதவியில் இருந்து திரு சிவகடாட்சம் உடனடியாக நீக்கப்பட்டார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்