யாழில் வயோதிபத் தம்பதி மீது கொலைவெறித் தாக்குதல்…மருத்துவமனையில் அனுமதி…!!

யாழ்ப்பாணத்தில் நடைபெற்றுவரும் குற்றச் செயல்களின் தொடர்சியாக வயோதிபத் தம்பதியர்மீது மர்ம மனிதர்கள் தமது கைவரிசையினைக் காட்டியுள்ளனர்.நேற்று முன்தினம் அதிகாலை 2.30 அளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.வடமராட்சி உடுப்பிட்டிச் சந்தியில் அமைந்துள்ள வீடொன்றில் புகுந்த குறித்த மர்மநபர்கள் அங்கிருந்த வயோதிபத் தம்பதியினர்மீது தாக்குதல் நடத்திவிட்டுத் தப்பிச் சென்றுள்ளனர்.

அத்துடன் அவர்கள் வைத்திருந்த இரண்டு கைபேசிகளையும் அபகரித்துச் சென்றுள்ளதாக பாதிக்கப்பட்டோரால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், இந்த தாக்குதலில் படுகாயமடைந்த குறித்த வயோதிபத் தம்பதியர் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.இதுகுறித்த மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.