மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் மகன் அழகிரி திமுகவின் செயல்தலைவர் ஸ்டாலினுடன் பேசுவதற்கு தூது அனுப்பியதாகவும் ஸ்டாலின் அதனை நிராகரித்து விட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மெரினாவில் கருணாநிதி சமாதிக்கு சென்று அஞ்சலி செலுத்திய பின்னர் அழகிரி திமுகவில் எனக்குத்தான் அதிக தொண்டர்கள் என தெரிவித்திருந்தார்.
அழகிரியின் இந்த கருத்தினால் ஸ்டாலின் கடும் சீற்றமடைந்துள்ளார்,இதன் காரணமாக கோபாலபுரம் இல்லத்திற்கு சென்ற அழகிரியுடன் ஸ்டாலின் பேசவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதனை தொடர்ந்து அழகிரி ஸ்டாலினுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்வதற்கு சிலரை தூது அனுப்ப அழகிரி தீர்மானித்துள்ளார்.
இதற்காக திமுகவில் தனக்கும் ஸ்டாலினிற்கும் நெருக்கமாக உள்ள பிரமுகர்கள் சிலரை அழகிரி தொடர்புகொண்டார்,ஆனால் ஸ்டாலின் கடும் கோபத்தில் இருப்பதாகவும் அழகிரியுடன் பேசவிரும்பவில்லை என அழகிரிக்கு தெரிவிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த பதிலால் சீற்றமடைந்த அழகிரி மீண்டும் சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்டுள்ளார்.
திமுகவை நான் உடைக்கவேண்டிய தேவையில்லை அது தானாகவே உடையும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.