இந்தியாவின் லடாக் பகுதியில் சீன இராணுவமானது மீண்டும் ஊடுருவி இராவ முகாம்களை அமைத்துள்ளதான் காரணமாக அப் பகுதியில் பெரும் பதற்ற நிலை ஏற்பட்டிருந்தது.
இந்தியா, சீனா மற்றும் பூட்டான் ஆகிய மூன்று நாடுகளும் சந்திக்கும் பகுதியில் லாடக் பகுதியானது மூன்று நாடுகளுக்கும் பொதுவாக அமைந்துள்ளது. அதனால் இப் பகுதிக்கு கடந்த காலமாக மூன்று நாடுகளும் உரிமை கோரி வருகின்றது.
கடந்த ஆண்டு இந்த பகுதியை நோக்கி சீன அரசாங்கம் சாலை அமைக்கும் நடவடிக்கையை மேற்கொண்டபோது இந்திய இராணுவம் அதனை தலையிட்டு அதனை தடுத்து நிறுத்தியது. இதன் காரணமாக அப் பகுதியில் இரண்டு மாத காலம் வரை பதற்றம் நிலவியது. இதையடுத்து இரு நாட்டு தலைவர்களும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியதன் பின்னர் அப் பதற்றமானது முடிவுக்கு கொண்டு வரப்பட்டது.
இந் நிலையில் தற்போது சீனா மீண்டும் இந்திய எல்லைப்பகுதிக்குள் ஊடுருவியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அந்த வகையில் கிழக்கு லாடக்கின் டெம்சாக் செக்டாரில் பகுதியில் சுமாமர் 300 தொடக்கம் 400 மீட்டர் தொலைவிக்கு சீனா ஊடுருவி ஐந்து இராணுவ முகாம்களை அமைத்துள்ளதன் காரணமாக அப் பகுதியில் பதற்ற நிலை மறுபடியும் ஆரம்பித்தது.
இதன் பின்னர் இந்திய இராணுவ அதிகாரிகள் சீனாவுடன் பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து மூன்று முகாம்களை சீன இராணுவம் அகற்றியுள்ளது. எனினும் ஏனைய இரண்டு இராணுவ முகாம்களிலும் சீன இராணுவத்தினர் இன்னும் தங்கியிருப்பதாகவும் இந்திய பாதுகாப்புத்துதறையினர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.