இரவில் வீணை வாசித்த இராணுவ வீரரால் போர்க்களமாகிய முகாம் ; 3 இராணுவ வீரர்கள் வைத்தியசாலையில் அனுமதி

இராணுவ வீரர்கள் இருவருக்கிடையில் ஏற்பட்ட போத்தல் தாக்குதலில் மூன்று இராணுவ விரர்கள் காயங்களுக்குள்ளாகி, தியத்தலாவை அரசினர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

462px-Broken_Bottle இரவில் வீணை வாசித்த இராணுவ வீரரால் போர்க்களமாகிய முகாம் ; 3 இராணுவ வீரர்கள் வைத்தியசாலையில் அனுமதி இரவில் வீணை வாசித்த இராணுவ வீரரால் போர்க்களமாகிய முகாம் ; 3 இராணுவ வீரர்கள் வைத்தியசாலையில் அனுமதி 462px Broken Bottle

தியத்தலாவை இராணுவ முகாமிலேயே மேற்படி சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது.

இரவு நித்திரை வேளையில், இராணுவ சிப்பாயொருவர் வீணை வாசித்துக்கொண்டிருந்த போது, அதனை நிறுத்தும்படி பிறிதொரு இராணுவ சிப்பாய் கூறவே, அது தொடர்பாக ஏற்பட்ட வாய்த்தர்க்கம் மோதலாகி, போத்தல் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டன.

பிறிதொரு இராணுவ சிப்பாய் இம் மோதலை தடுக்க முற்பட்ட போது மூவரும் காயங்களுக்குள்ளாகினரென்று ஆரம்ப விசாரணைகளின் போது தெரிய வந்துள்ளது.

போத்தல் தாக்குதல்களினால் ஏற்பட்ட வெட்டுக்காயங்களுடன் மூன்று இராணுவ சிப்பாய்கள் காயங்களுக்குள்ளாகினர்.

இச்சம்பவம் குறித்து தியத்தலாவை பொலிஸார் இராணுவ பொலிஸாருடன் இணைந்து புலன் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.