அதிக மருத்துவ குணங்கள் கொண்ட கறிவேப்பிலையை பெரும்பாலானோர் மணத்துக்காகப் பயன்படுத்தி விட்டு, உணவில் இருந்து அதனை தூக்கி எறிந்து விடுகின்றனர்.
கறிவேப்பிலையில் உள்ள சத்துக்களையும், மருத்துவ குணங்களையும் அறிந்தவர்கள், அதை தூக்கி எறிவதில்லை. சுவைத்தும், சவைத்தும் சாப்பிட வேண்டிய அருமருந்து.
கருவேப்பிலை, அனைத்து வகை சமையல்களிலும் தவறாது இடம் பெற்றிருக்கும். இதில் 0.66 சதவீத நீர்ச்சத்து, 6.1 சதவீத புரதம், 0.1 சதவீத கொழுப்பு, 0.16 சதவீத மாவுப்பொருள், 6.4 சதவீத நார்ப்பொருள் மற்றும் உடலுக்கு தேவைப்படும் தாது உப்புக்கள் 4.2 சதவீதம் உள்ளது.
இதுதவிர குறைந்த அளவில் காணப்படும் சத்துக்களாக 100 கிராம் இலையில் 810 மில்லி கிராம் கால்சியம்,600 மில்லி கிராம் பாஸ்பரஸ், 3.1 மில்லி கிராம் இரும்பு சத்து, 4 மில்லி கிராம் வைட்டமின் சி, 2.3 மில்லி கிராம் நிகோடினிக் அமிலம், வைட்டமின் ஏ ஆகியவையும் உள்ளன.
பசியை தூண்டி உண்ணும் ஆவலை வளர்க்கும், செரிமானத்துக்கு துணையாக இருக்கும். உடலுக்கு உரமூட்டவல்லது.
வெள்ளை அணுக்களின் கிருமியை எதிர்க்கும் ஆற்றலை கறிவேப்பிலையின் சாற்றை அதிகரிக்கச் செய்கிறது. இலையுடன் பிற மருந்துகளைச் சேர்த்து, துவையல் செய்து சாப்பிட பித்த வாந்தி, செரியாமை, வயிற்றுளைச்சல் குணமாகும்.