நடிகர் பார்த்திபனை தெரியாதவர்கள் இருக்க முடியாது. பல படங்களில் நடித்த சில படங்களை இயக்கியுள்ளார். அவருக்கு தேசிய விருதும் கிடைத்துள்ளது. அரசியல் ரீதியான கருத்துக்களை தைரியமாக பேசக்கூடிவர்.
அண்மையில் ஈரோடு புத்தக திருவிழாவில் கலந்துகொண்டு சிறப்பு நிகழ்ச்சியில் பேசினார். அப்போது அவர் அரசியல் தலைவர் ஒருவர் என்னை அணுகினார். எங்கள் கட்சியில் இணைந்து விடுங்கள்.
ரூ.100 கோடி தருகிறேன் என்று அவர் கூறினார். ஆனால் நான் அதை மறுத்துவிட்டேன். எனக்கு அரசியல் பற்றி எதுவும் தெரியாது. அதில் எனக்கு விருப்பமும் இல்லை. ஆனாலும் நான் அரசியல் பேசுவேன் என கூறினாராம்.