ஒட்டுமொத்த நோய்களையும் குணப்படுத்தும் ஒரே இலை….!

உலகம் முழுவதிலும் உள்ள பல்வேறு வியாதிகளுக்கு வேப்பிலை மருந்தாகும் என உங்களுக்கு தெரியுமா?

வேப்பிலை நாவுக்கு கசப்பாக இருந்தாலும், உடலுக்கு இனிப்பையும் பாதுகாப்பினையும் தரும்.

இன்னும் சொல்வதானால், வேப்பிலை பல நற்குணம் நிறைந்ததாகும். ஆயுர்வேதத்தை பொருத்த வரையில், அது பல நோய்களை குணப்படுத்தும் குணம் கொண்ட சக்தி வாய்ந்த மூலிகையாகும்.

4500 ஆண்டுகளுக்கு முன்பே இது பல்வேறு உபாதைகளுக்கு மருந்தாக பயன்படுத்தப்பட்டதற்கான சான்றுகள் நிறைய காணப்படுகின்றன. ஆயுர்வேதத்தில் வேப்பிலை பித்தம் மற்றும் கபம் தொடர்பான வியாதிகளை குணப்படுத்த முக்கியமாக பயன்படுத்தப்படுகிறது.

இது தவிர வேப்பிலையின் மேலும் பல மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளன: இரத்தத்தை சுத்தப்படுத்தும், நச்சுகளை நீக்கும், பூச்சி கடியையும் அல்சர்களையும் குணப்படுத்தும், உடலில் உள்ள ஃப்ரீ ரேடிக்கல்களால் உடல் பாதிப்படையாமல் காக்கும், புண்கள், தீக்காயங்கள், இன்ஃபெக்க்ஷன் மற்றும் இன்ன பிற சரும பாதிப்புகளை குணப்படுத்தும். இன்ஃபெக்க்ஷன் ஏற்படுத்தும் பேக்டீரியாவை அழித்து நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

வேப்பிலையின் இத்தனை நன்மைகள் இருந்தாலும், ஒட்டுமொத்த ஆரோக்கியம் மற்றும் நலனுக்காக தினசரி வாழ்வில் நீங்கள் அதனை பயன்படுத்தக் கூடிய சிறப்பான 10 வழிகளை இங்கு நாங்கள் உங்களுக்காக வழங்கியுள்ளோம்.

நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க

வேப்பிலை நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வல்லது. அதில் உள்ள ஆன்டிபேக்டீரியல் மற்றும் ஆன்டிஃபங்கல் குணங்களை முழுமையாக பெற அதனை டீ வடிவில் அருந்தலாம். சில வேப்பிலைகளை நசுக்கி அதனை வெதுவெதுப்பான நீரில் போட்டு அதனை அருந்துங்கள். இதன் மூலம் உங்களது பொதுவான உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்கலாம்.

உடலில் இருந்து நச்சுக்களை நீக்க

நச்சுக்களை நீக்குவதில் சிறப்பு பெற்றது அது. இதில் கசப்பு தன்மை அதிகம் உள்ளதால் உடலின் வளர்சிதை மாற்றத்தை அதிகரித்து கல்லீரல் மற்றும் சிறுநீரகத்தை சுறுசுறுப்பாக்கி நச்சுக்களை நீக்க செய்கிறது. வேப்பிலையை பொடி செய்து பசு நெய்யில் கலந்து சாப்பிடலாம். அல்லது வேறு வடிவிலும் எடுத்துக் கொண்டால் உடலில் இருந்து நச்சுக்களை நீக்கலாம்.

இரத்தத்தில் ஆரோக்கியமான அளவு சக்கரை அளவை பராமரித்தல்

வேப்பிலை உங்களது சக்கரை அளவினை சீராக்குவதில் உதவும் என்று உங்களுக்கு தெரியுமா? இரத்தத்தில் உள்ள இன்சூலினின் பணிகளை சீராக்கி உடலுக்கு சரியான அளவு இன்சூலின் கிடைக்க செய்கிறது. எனவே, வேப்பிலையை பயன்படுத்துவதால் சர்க்கரை நோயுள்ளவர்கள் இன்சூலினை நம்பி இருப்பதை குறைக்கிறது. எனினும், மருத்துவரை கலந்தாலோசித்து அதனை உட்கொள்ள வேண்டிய அளவு மற்றும் பிற விஷயங்களை அறியவும்.

இரைப்பைக்குடலை ஆரோக்கியமாக வைத்திருக்கும்

வேப்பிலை இரைப்பைக்குடலில் ஏற்படும் அழற்சியை குணப்படுத்தும், அல்சர்களை சரி செய்யும், உப்புசம், வயிற்று பிடிப்பு, மலச்சிக்கல் மற்றும் வயிற்று இன்பெக்க்ஷனை தடுக்கிறது. செரிமானம் மற்றும் கழிவு பொருட்கள் வெளியேற்றத்தையும் சீராக்கும்.

கீல்வாதத்தை சரி செய்யும்

அழற்சியை குணப்படுத்தும் குணநலன்களை கொண்டுள்ளதால் வேப்பிலை கீல்வாதத்தை குணப்படுத்த உதவுகிறது. வேப்பிலையில் இருந்து தயாரிக்கப்படும் எண்ணெய் அல்லது பேஸ்ட்டை வலியுள்ள மூட்டுக்கள் மற்றும் தசைகளில் தடவினால் வலியும் வேதனையும் குறையும்.

வாய் ஆரோக்கியத்தை தரும்

வேப்பிலை வாய் ஆரோகியத்துக்காக பயன்படுத்தப்படும் பெரும்பாலான பொருட்களில் பயன்படுத்தப்படும். பேக்டீரியாவை எதிர்க்கும் தன்மை வேப்பிலையில் உள்ளதால் பற்களில் தோன்றும் நோய்கள் மற்றும் வாய் துர்நாற்றம் ஆகியவற்றை அது சரி செய்கிறது. வேப்பிலை நீரை மவுத்வாஷ் ஆக பயன்படுத்தலாம். வேப்பிலை குச்சிகளையும் டூத்பிரஷ் ஆக பயன்படுத்தலாம்.

காதுகள்/கண்களில் தோன்றும் சிறு பிரச்சனைகளை சீராக்கும்

பிஞ்சு வேப்பிலைகளை சுடு நீரில் இட்டு அதனை முழுமையாக ஆற வைக்கவும். இந்த நீரை கொண்டு உங்களது கண்களை கழுவினால் கண்ணெரிச்சல், கண் சிவந்து போதல் மற்றும் சோர்வு ஆகியவற்றில் இருந்து உடனடி நிவாரணம் பெறலாம். சில இலைகளை அரைத்து அதனை காதுகளில் ஏற்படும் கட்டிகளில் பூசினால் குணமடையலாம்.

அனைத்து வகை சரும பிரச்சினைகளையும் சரி செய்யும்

ஒரு கப் வேப்பிலைகளை நீரில் கொதிக்க வைத்து அவை நிறம் மங்கி மென்மையானதும் அதனை வடிகட்டி ஒரு பாட்டிலில் அடைத்து ஆற வைக்கவும். தினசரி நீங்கள் குளிக்கும் நீரில் இந்த வேப்பிலை நீரை சிறிது கலந்து குளித்து வந்தால், சரும இன்ஃபெக்க்ஷன், பருக்கள் மற்றும் உடல் துற்நாற்றம் ஆகியவற்றை சரி செய்யலாம். சில இலைகளை நீர் சேர்த்து அரைத்து அதனை ஃபேஸ் பேக் மூலம் முகத்தில் பூசி வந்தால் பருக்கள் நெருங்காது. பொதுவாக வேப்பிலைகளை அரைத்து அந்த பேஸ்டை பூசுவதால் காயங்கள் குணமடைவதுடன் இன்ன பிற சரும பாதிப்புகளும் நீங்கும். வேப்பிலை நீர் ஒரு சிறந்த ஸ்கின் டோனர் ஆகும். அதனை பயன்படுத்தினால் நோய் தொற்றுக்கள் மற்றும் ஒவ்வாமை போன்ற பிரச்சினைகள் குணமடையும்.

கூந்தலில் தோன்றும் பிரச்சினகளை சரி செய்யும்

வேப்பிலைகளை கொதிக்கும் நீரில் போட்டு அது ஆறியதும், அதனை கொண்டு தலைமுடியை அலசவும். இதிலுள்ள பேக்டீரியா எதிர்ப்பு சக்தி கூந்தலில் உள்ள பேன்கள், பொடுகு, உச்சந்தலை காய்ந்து போதல், முடியுதிர்தல் மற்றும் வறண்ட கூந்தல் ஆகிய பிரச்சினைகள் குணமாகும். அது உங்களது கூந்தலை மென்மையாக்கி பளபளப்பாக்கும்.

பூச்சிகளை விரட்டும்

வேப்பிலை அனைத்து வகையான பூச்சிகளையும் விரட்டும் சக்தி கொண்டது. வேப்பிலை நீரில் முக்கிய பஞ்சினை உங்களது ஜன்னலுக்கு அருகில் வைத்தால் அல்லது வேப்பிலையை கொளுத்தினால் பூச்சிகள் அண்டாது. கொசுக்களை விரட்ட இது ஒரு இயற்கையான வழியாகும்.

குறிப்பு: வேப்பிலை ஒரு சக்தி வாய்ந்த மூலிகையாகும் எனவே இதனை சிறு குழந்தைகள் மற்றும் வயதில் குறைந்தவர்களுக்கு பயன்படுத்த கூடாது.

மேலும் கர்பிணிகள், சர்க்கரை நோயாளிகள் மற்றும் சிறுநீரகம் அல்லது கல்லீரல் பிரச்சினைகள் கொண்டவர்கள் இதனை உட்கொள்ளும் முன் மருத்துவரை கலந்தாலோசிப்பது நல்லது.