லிவ்-இன் ரிலேஷன்ஷிப்பில் இருந்த பிக்பாஸ் நடிகர் சென்ட்ராயன்! இது தெரியுமா?

நடிகர் சென்ட்ராயன் சினிமாவில் நடிகராக மட்டுமே அனைவருக்கும் தெரியும். அவர் தற்போது பிக்பாஸ் வீட்டில் போட்டியாளராக உள்ள நிலையில், மற்ற போட்டியாளர்களிடம் தன் சொந்த வாழக்கையில் நடந்த சில சம்பவங்கள் பற்றி பேசியுள்ளார்.

அவர் தன் காதலியை (இப்போது மனைவி) திருப்பூரில் தான் சந்தித்தாராம். முதல் முறை சந்தித்த போது கயல்விழியை ஒரு ஹோட்டலுக்கு சாப்பிட கூட்டி சென்றாராம். கையில் காசு இல்லை என்பதால் நண்பரிடம் வாங்கி சென்றாராம். பின்னர் மூன்றாவது சந்திப்பிலேயே அவரை பெண்கள் உள்ளாடை விற்கும் கடைக்கு கூட்டி சென்று சில பொருட்களை வாங்கிக்கொடுத்தாராம். அதை பற்றி அறிந்த கயல்விழியின் தோழிகள் சென்ட்ராயன் கேரக்டர் பற்றி தவறாக பேசியுள்ளனர்.

அதன் பின் மூன்று மாதங்கள் கழித்து இருவரும் ஒன்றாக ஒரே வீட்டில் வாழ ஆரம்பித்துவிட்டார்களாம். திருமணம் செய்திருந்தால் தான் வீடு கொடுப்பார்கள் என்பதால் கயல்விழியின் கழுத்தில் போலியாக ஒரு தாலி போட்டு வாடகை வீடு எடுத்து வாழ்ந்தார்களாம். அதன் பின்னர் தான் வீட்டினரிடம் சொல்லி திருமணம் செய்துள்ளனர்.

இது நடந்து பல வருடங்கள் ஆகியுள்ள நிலையில் இருவருக்கும் தற்போது வரை குழந்தை இல்லை என கமலிடம் சென்ட்ராயன் சொன்னது குறிப்பிடத்தக்கது.

தான் கர்பமாக இருப்பதாகவும், சென்ட்ராயன் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளிவந்த பிறகு அவருக்கு சர்ப்ரைஸ் கொடுக்கவுள்ளதாக கயல்விழி சமீபத்தில் அளித்த பேட்டியில் தெரிவித்திருந்தார்.