சீரகம் மிக அதிக மருத்துவ குணங்களை கொண்ட மசாலா வகை உணவு பொருள் ஆகும். இதனை அளவாக பயன்படுத்தினால் நன்மை கிடைக்கும். ஆனால் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்ற நினைப்பில் மிக அதிகமாக பயன்படுத்தினால் அதிக ஆரோக்கியம் கிடைக்காது. மாறாக ஆபத்து தான் உண்டாகும்.
பொதுவாக எந்த ஒரு கார உணவும் சீரகத்தை பயன்படுத்தாமல் தயாரிக்கப்படுவது இல்லை. அதற்கு காரணம் என்னவென்றால், சீரகம் செரிமானம் ஆவதற்கு உதவும், நச்சுக்களை வெளியேற்றும்.
வெறும் சீரகம்
கேரளாவில் அதிகப்படியானோர் சீரக தண்ணீரை அதிகமாக குடிப்பார்கள். இதில் தவறு ஏதும் இல்லை. ஆனால் உடல் நோய்களுக்காக சீரகம் சாப்பிடும் போது கண்டிப்பாக மருத்துவரின் ஆலோசனை படி தான் சீரகம் சாப்பிட வேண்டும். மேலும் சிலர் சீரகத்தை அடிக்கடி வாயில் போட்டு மென்று கொண்டு இருப்பார்கள் இது முற்றிலும் தவறான ஒரு முறையாகும். இதில் உள்ள காரத்தன்மை மிகப்பெரிய தீங்கை விளைவிக்ககூடியதாகும்.
நெஞ்செரிச்சல்
அதிகமாக சீரகத்தை சாப்பிட்டால் நெஞ்சு எரிச்சலை உண்டாக்கும். அசிடிட்டி இருப்பவர்கள் சீரகத்தை கொஞ்சமாக சாப்பிடுவதும், அளவாக பயன்படுத்துவதும் நல்லது.
கருச்சிதைவு
சீரகத்தை அதிகமாக எடுத்துக்கொள்வதால், கர்ப்பினி பெண்களுக்கு கருச்சிதைவு ஏற்படுகிறது. குறை பிரசவம் உண்டாவதற்கு கூட இது காரணமாக உள்ளது. தினமும் அதிகமாக சீரகம் சாப்பிடுவதால், வயிற்று உப்பசம் ஏற்படும் அதுமட்டுமின்றி குமட்டல், வாந்தி போன்றவையும் ஏற்படும்.
அதிக இரத்தப்போக்கு
மாதவிடாய் காலங்களில் அதிகமாக சீரகம் எடுத்துக்கொண்டால் அது இரத்தப்போக்கை அதிகமாக ஏற்படுத்துகிறதாம். எனவே இது மாதிரியான சமயங்களில் சீரகத்தை தவிர்ப்பது நல்லது.
சக்கரையை குறைக்கும்
சீரகம் சக்கரையின் அளவை இரத்ததில் குறைப்பதற்கு உதவுகிறது. எனவே சக்கரையின் அளவை கட்டுப்பாட்டில் வைத்திருப்பவர்கள் சீரகத்தை அதிகமாக சாப்பிடுவதை நிறுத்த வேண்டும்.