இருமல் என்பது எல்லா வயதினரையும் தாக்கும் உடல் பிரச்சினை ஆகும். அதிலும் நோயெதிர்ப்பு சக்தி கொண்ட குழந்தைகளை இது அடிக்கடி தொற்றிக் கொள்ளும். ஒரு நாள் அல்லது இரண்டு நாட்களுக்கு மேலாக கூட இது இருக்கும்.
ரொம்ப நாள் இருமலுடன் தொடர்வது நல்லது அல்ல. இது உங்கள் உடலில் ஏற்பட்டுள்ள தீவிர அலற்சியை சுட்டிக் காட்டுகிறது. எனவே ரெம்ப நாளைக்கு இருமலை நீடிக்க விடாதீர்கள். உடனே அதற்கான வழிமுறைகளை மேற்கொள்வது நல்லது. தொடர்ச்சியான இருமல் உங்கள் நுரையீரலை பாதிப்படையச் செய்து விடும்.
இருமலின் வகைகள் இரண்டு வகையான இருமல் நம்மிடையே காணப்படுகின்றன. குறிப்பாக, ஒன்று சாதாரணமாக சளி பிடிக்கும்போது உண்டாவது.மற்றொன்று வறட்டு இருமல் என்று சொல்லுவார்கள். இந்த வறட்டு இருமல்தான் நம்மை படாத பாடு படுத்திவிடும். தொண்டை வறட்சியாக ஆகிவிடும். அதன்பின் தொடர்ந்து இருமுவதால், தொண்டை வலியும் எரிச்சலும் உண்டாகும்.
வறட்டு இருமல் தொண்டையில் ஒரு விதமான எரிச்சல் மற்றும் கரகரப்பு ஏற்படும். இதனால் இருமல் உண்டாகும்.
காரணிகள் தூசி மற்றும் மாசுக்கள் போன்றவற்றால் ஏற்படும் அழற்சியால் ஏற்படுகிறது. இது எதனால் ஏற்பட்டது என்பதை கண்டறிந்து அதன் ஆணி வேரை தகர்க்க வில்லை என்றால் மறுபடியும் இருமல் உருவாக வாய்ப்புள்ளது. எனவே எதனால் நமக்கு அழற்சி ஏற்படுகிறது என்பதை முதலில் கண்டறிந்து அதை தவிர்க்க வேண்டும்
சளி இருமல் இந்த வகை இருமல் சளித் தொல்லையால் ஏற்படுகிறது. நுரையீரலில் தங்கி இருக்கும் சளியை வெளியேற்ற இந்த இருமல் உண்டாகிறது
சிகிச்சை இருமலுக்கு மருத்துவர்கள் கொடுக்கும் மருந்துகள் ஒரு தற்காலிக குணப்படுத்தும் முறையாகும். இதில் அதன் ஆணி வேரை அவர்கள் சரி செய்ய மாட்டார்கள். பெரியவர்களுக்கு ஆன்டிபயோடிக் மருந்துகளும் பரிந்துரைக்கின்றனர். எனவே இருமலை அடியோடு தீர்க்க ஒரே முறை வீட்டு வைத்தியங்கள். உங்கள் சமையலை பொருட்களை கொண்டே எப்பேர்ப்பட்ட இருமலையும் விரட்டு விடலாம். சரி வாங்க அந்த முறைகளைப் பற்றி இப்பொழுது பார்க்கலாம்.
உப்பை வைத்து கொப்பளித்தல் இருமலை குணப்படுத்த ஒரு மிகச்சிறந்த வழி வெதுவெதுப்பான நீரில் உப்பு போட்டு கொப்பளித்தல். தொண்டையில் ஏற்படும் அசெளகரியத்தை உப்பு கலந்த நீர் சரி செய்கிறது. சளி சவ்வுகளால் தொண்டையில் ஏற்படும் அசெளகரியம் உப்பு கலந்த நீரால் சரியாகுகிறது. தொண்டையில் ஏற்படும் கொப்புளங்கள் மற்றும் வீக்கத்தை குறைக்கிறது. கபம் போன்றவற்றை வெளியேற்றுகிறது. பயன்படுத்தும் முறை 8 அவுன்ஸ் தண்ணீரை நன்றாக சூடுபடுத்த வேண்டும். அதில் 1 டீ ஸ்பூன் உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும். தண்ணீர் ரெம்பவும் சூடாக இல்லாமல் தொண்டையில் பட்டு கொப்பளிக்கும் அளவிற்கு வெதுவெதுப்பாக இருந்தால் போதும்.
தேன் தேன் ஒரு மிகச்சிறந்த மருந்து. வீட்டிலேயே இருமலை சரி செய்ய ஒரு அருமருந்தாகும். இதில் நிறைய ஆன்டிபயோடிக் பொருட்கள் உள்ளன. தேனை தொண்டையில் தடவும் போது இருமல் கட்டுக்குள் வருகிறது. எடுத்து கொள்ளும் அளவு 1 டேபிள் ஸ்பூன் தேனை ஒரு நாளைக்கு 2-3 தடவை பயன்படுத்தலாம். படுக்கைக்கு போவதற்கு முன் இதை பயன்படுத்துங்கள். 2 வயதிற்கு மேலே உள்ள குழந்தைக்கு 1 டீ ஸ்பூன் போதும்.
இஞ்சி இஞ்சியுடன் தேன் கலந்து சாப்பிடும் போது இருமல் உடனடியாக குணமாகிறது. இஞ்சி நுரையீரலில் தங்கியிருக்கும் சளியை வெளியேற்ற பெரிதும் உதவுகிறது. இஞ்சி தொண்டையில் ஏற்படும் கரகரப்பை போக்கி இருமல் தொடர்ச்சியாக வராமல் செய்கிறது. அதிலும் இதை தேனுடன் சாப்பிடும் போது இன்னும் நிறைய பலன்களை தருகிறது. தயாரிக்கும் முறை இஞ்சியை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும். தேனை எடுத்து கொள்ளுங்கள். இஞ்சியை தண்ணீரில் போட்டு நன்றாக சில நிமிடங்கள் கொதிக்க விடவும். இஞ்சியின் சாறு நன்றாக தண்ணீரில் இறங்க வேண்டும். அதனுடன் தேன் கலந்து ஆறியவுடன் அவ்வப்போது பருகவும்
தைம் தாவரம் தைம் ஒரு மருத்துவ மூலிகை ஆகும். இதில் ஆன்டி மைக்ரோபியல் பொருட்கள் உள்ளன. எனவே இது இருமலை குணப்படுத்த பெரிதும் பயன்படுகிறது. தயாரிக்கும் முறை ஒரு பாத்திரத்தில் தைம் ஆயிலை 8 அவுன்ஸ் கொதிக்கும் சூடான நீரில் சேர்க்கவும். இப்பொழுது அதை ஒரு மூடி கொண்டு 15 நிமிடங்கள் மூடி விடுங்கள். இந்த தண்ணீரை அவ்வப்போது குடித்து வர வேண்டும். சுவைக்கு கொஞ்சம் லெமன் ஜூஸ் அல்லது தேன் கூட சேர்த்து கொள்ளலாம். மேற்கண்ட முறைகள் அனைத்தும் உங்கள் இருமலை போக்க மிகச் சிறந்த முறைகள். எந்த பக்கவிளைவுகளும் இல்லாமல் இருமலிலிருந்து உடனடி நிவாரணம் அளிக்கும். பயன்படுத்தி பலனை பெறுங்கள்.