100 பெண்களை ஏமாற்றியவர் கைது!

சிவில் பொறியியலாளர் என தன்னை அறிமுகப்படுத்தி கொண்ட ஒருவர், திருமணம் முடித்துக்கொள்வதாகக் கூறி, அந்த யுவதியிடமிருந்த சொத்துகள் மற்றம் பணத்தை மோசடிச்செய்தார் என்ற குற்றச்சாட்டின் கீழ், மிரிஹான விசேட குற்ற நடவடிக்கைகள் பிரிவு அதிகாரிகளினால் ஒருவர் கைதுசெய்யப்பட்டார்.

அவர், சிவில் பொறியியலாளர் அல்லர் என்றும், தச்சன் என்றும் ஆரம்பக்கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது. கைதுசெய்யப்பட்ட நபரிடமிருந்து கைப்பற்றப்பட்ட ​அலைபேசிகள் மற்றும் நான்கு சிம் அட்டைகளிலிருந்து ​அலைபேசி இலக்கங்களின் ஊடாக விசாரணைகளை நடத்திய போது, அவர், இதுவரைக்கும் 100 பெண்களை ஏமாற்றியுள்ளாரென, அறிமுடிந்துள்ளது.

அவ்வாறு மோசடியில் ஈடுபட்டு, ஏமாற்றி பெற்றுக்கொண்ட கார், மடிகணினி, கணினி ஆகியனவும் 50 ஆயிரம் ரூபாய் பணமும், கைப்பற்றப்பட்டுள்ளது என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.