இலங்கையில் நிலவிய போரின் போது பாதுகாப்பு காரணங்களுக்காக கொழும்பு துறைமுகம் உயர் பாதுகாப்பு வலயமாக பிரகடனம் செய்யப்பட்டது.தற்போது சமாதானமான நிலை காணப்படுவதனால் பொது மக்களின் சொத்தாக கருதி கொழும்பு துறைமுகத்தை மக்கள் பார்வைக்காக திறந்து வைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதியின் ஆலோசனைக்கமைய, எதிர்வரும் நாட்களில் இந்த துறைமுகம் திறந்து வைக்கப்படவுள்ளதாக துறைமுகங்கள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.