முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் மறைவு கவலை அளிக்கிறது: நடிகர் ரஜினிகாந்த் இரங்கல்

இந்திய முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயின் மறைவு கவலை அளிப்பதாக நடிகர் ரஜினிகாந்த் வருத்தம் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய்(93) உடல் நலக்குறைவு காரணமாக இன்று காலமானார்.

இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த் முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறுகையில்,

‘சிறந்த ஆட்சியாளரான திரு.வாஜ்பாயின் மறைவு கவலை அளிக்கிறது. அவரது ஆத்மா சாந்தி அடைய வேண்டுகிறேன்’ என தெரிவித்துள்ளார்.