பிரித்தானியாவை இரண்டாக பிரிக்கப்போகும் எர்னஸ்டோ புயல்: வானிலை எச்சரிக்கை

மணிக்கு 40 மைல் வேகத்தில் பிரித்தானியாவை நெருங்கிக் கொண்டிருக்கும் எர்னஸ்டோ புயல் பிரித்தானியாவை இரண்டாகப் பிரிக்கப்போவதாக வானிலை ஆராய்சி மையம் தெரிவித்துள்ளது.

அதாவது நாட்டின் வடக்கு பகுதிகள் காற்று மற்றும் மழையால் தாக்கப்பட இருக்கும் அதே நேரத்தில் நாட்டின் தென் பகுதிகள் 80 டிகிரி ஃபாரன்ஹீட்டை அனுபவிக்கப்போகின்றன.

இந்த வெப்பநிலை ஆகஸ்டிலும் தொடரும் என தெரிகிறது. இத்தகைய நிலையற்ற வெப்பநிலை வடக்கு அயர்லாந்து, ஸ்காட்லாந்து மற்றும் மேற்கு இங்கிலாந்து ஆகிய பகுதிகளை ஞாயிறு அன்று தாக்கும் என்றாலும் அந்த நேரத்தில் புயல் வலுவிழந்திருக்கும் என்றும் கருதப்படுகிறது.

சனிக்கிழமை இரவும் ஞாயிறு காலையும் பலத்த காற்றும் கன மழையும் எதிர்பார்க்கப்படுவதாக வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.

ஆனால் விடிந்தபின் மழையும் காற்றும் குறைந்துவிடும் என்றும் ஸ்காட்லாந்திலும் வட இங்கிலாந்திலும் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் என்றும் மேகமூட்டம் அதிகம் காணப்படும் இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது..

வார இறுதியில் சிறந்த தட்பவெப்பநிலையை அனுபவிக்கப்போவது மத்திய மற்றும் தென் இங்கிலாந்து பகுதிகள்தான்.

அங்கு 20 டிகிரி செல்ஷியஸ் அளவில் வெப்பநிலை இருக்கும், அதிகபட்சமாக லண்டனில் 26 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலை இருக்கும்.

ஆக இன்றைய வானிலை நிலவரம் பிரித்தானியாவின் தென் கிழக்கு பகுதிகளுக்கு மோசமானதாகவும் பிரித்தானியாவின் இதர பகுதிகளுக்கு இதமான வெப்பத்தை அளிப்பதாகவும் இருக்கப்போகிறது.