குஜராத்தில் இருந்து 300 குழந்தைகளை அமெரிக்காவுக்கு பாலியல் தொழிலுக்காக கடத்தி விற்றதாகத் தொடரப்பட்ட வழக்கில் முக்கிய குற்றவாளியை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
குஜராத்தில் கடந்த மார்ச் மாதம் அழகு நிலையத்தில் சந்தேகத்துக்கு இடமான வகையில் குழந்தைகளுக்கு அலங்காரம் செய்யப்படுவதை அறிந்த இந்தி நடிகை பிரீத்தி (Preeti Sood) இருவரை பொலிஸாரிடம் பிடித்துக் கொடுத்துள்ளார்.
இதன்மூலம் மிகப்பெரிய கடத்தல் வெளிச்சத்துக்கு வந்தது.
விசாரணையில், குஜராத்தில் ஏழைப் பெற்றோரிடம் பேரம் பேசி 11 முதல் 16 வயதுள்ள குழந்தைகளை விலைக்கு வாங்கி, வேறு சிறுமிகளின் பாஸ்போர்ட்டில் உள்ள புகைப்படத்துக்கு ஏற்ப அவர்களை அலங்காரம் செய்து அமெரிக்காவுக்கு கடத்தியது தெரிய வந்தது.
அவர்கள் கடத்தப்பட்ட கப்பலிலேயே பாஸ்போர்டை திரும்ப கொண்டு வந்து, உரியவரிடம் வாடகையோடு ஒப்படைத்ததும் கண்டறியப்பட்டுள்ளது.
இதுபோல் 2007 முதல் 300 ஏழைக்குழந்தைகளை விலைக்கு வாங்கி அமெரிக்காவுக்கு பாலியல் தொழிலுக்குக் கடத்தியதாக ராஜூபாய் கைது செய்யப்பட்டுள்ளான்.