பொதுவாக சளி, இருமல், மூக்கடைப்பு, தொண்டை வலி என்று பல பிரச்சினைகளுக்கு நிவாரணம் அளிக்க பயன்படுத்தப்பட்டு வரும் ஓர் பொருள் தான் விக்ஸ்.
இந்த பொருள் உடல்நல பிரச்சனைகளுக்கு தீர்வளிக்க மட்டுமின்றி, பலவாறும் பயன்படுகிறது. ஆனால் விக்ஸைக் கொண்டு தற்போது பலரும் கஷ்டப்பட்டு வரும் ஓர் பிரச்சினையான தொப்பையைக் குறைக்கலாம் என்பது தெரியுமா?
விக்ஸைக் கொண்டு மசாஜ் செய்து வருவதன் மூலம் கொழுப்பு செல்கள் அழிக்கப்பட்டு, விரைவடைந்த சருமம் சுருங்கும் போது ஏற்படும் தழும்புகள் நீக்கப்படுவதோடு, சருமமும் அழகாக இருக்கும்.
விக்ஸை தனியாக பயன்படுத்தக்கூடாது
விக்ஸை தனியாக பயன்படுத்துவதற்கு பதிலாக, அத்துடன் கொழுப்புச் செல்களை வேகமாக எரிக்க பயன்படும் சில பொருட்களான கற்பூரம், பேக்கிங் சோடா, ஆல்கஹால் போன்றவற்றுடன் கலந்து பயன்படுத்தினால், இதன் செயல்முறை இன்னும் வேகமாக்கப்படும்.
தொப்பைக் கரைக்கும் க்ரீம்
தேவையான பொருட்கள்
- விக்ஸ்
- கற்பூரம்
- பேக்கிங் சோடா
- ஆல்கஹால்
செய்முறை
முதலில் ஒரு பிளாஷ்டிக் டப்பாவில் கற்பூரத்தைப் பொடி செய்து சேர்த்து, அத்துடன் பேக்கிங் சோடா, விக்ஸ் மற்றும் ஆல்கஹால் சேர்த்து நன்கு க்ரீம் போன்று கலந்து கொள்ள வேண்டும்.
எப்படி பயன்படுத்த வேண்டும்?
மாலையில் அல்லது உடற்பயிற்சி செய்யும் முன், இந்த க்ரீம்மை வயிறு போன்ற கொழுப்பைக் கரைக்க நினைக்கும் பகுதிகளில் தடவி வட்ட சுழற்சியில் சிறிது நேரம் மசாஜ் செய்து, பின் ஒரு பிளாஷ்டிக் கவர் கொண்டு அப்பகுதியை சுற்றிக் கொண்டு 30 நிமிடம் உடற்பயிற்சியில் ஈடுபட வேண்டும். இல்லாவிட்டால், இரவில் படுக்கும் முன் இவ்வாறு வயிற்றில் தடவி பிளாஷ்டிக் கவர் கொண்டு சுற்றி இரவு முழுவதும் ஊற வைக்க வேண்டும்.
குறிப்பு
இச்செயல்முறையை பின்பற்றும் போது சமச்சீரான டயட் மற்றும் உடற்பயிற்சியை மேற்கொள்ள வேண்டியது அவசியம். மேலும் குடிக்கும் நீரின் அளவையும் அதிகரிக்க வேண்டும்.