-
மேஷம்
மேஷம்: பிள்ளைகள் குடும்ப சூழ்நிலை அறிந்து செயல்படுவார்கள். மனைவி வழியில் ஒத்துழைப்பு அதிகரிக்கும். எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் வேலையாட்கள் மதிப்பார்கள். உத்யோகத்தில் மூத்த அதிகாரிகள் முக்கிய அறிவுரை தருவார்கள். நன்மை கிட்டும் நாள்.
-
ரிஷபம்
ரிஷபம்: குடும்பத்தினரின் எண்ணங்களைக் கேட்ட றிந்து பூர்த்தி செய்வீர்கள். மனதிற்கு இதமான செய்தி வரும். வியாபாரத்தில் அனுபவமிக்க வேலையாட்களை தேடுவீர்கள். உத்யோகத்தில் சில புதுமைகளைச் செய்து எல்லோரின் கவனத்தையும் ஈர்ப்பீர்கள். அமோகமான நாள்.
-
மிதுனம்
மிதுனம்: புதிய முயற்சிகள் யாவும் வெற்றியடையும். பிள்ளைகளின் உயர்கல்வி, உத்யோகம் குறித்து யோசிப்பீர்கள். நட்பால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தை விரிவுப்படுத்துவீர்கள். உத்யோகத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். புதுமை படைக்கும் நாள்.
-
கடகம்
கடகம்: கடந்த கால இனிய அனுபவங்களை நினைவுக்கூர்ந்து மகிழ்வீர்கள். தாய்வழி உறவினர்களுடன் மனஸ்தாபம் வந்து நீங்கும். பணப்பற்றாக்குறையை சமாளிப்பீர்கள். வியாபாரத்தில் புது பங்குதாரரை சேர்ப்பீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஆதரிப்பார்கள். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள்.
-
சிம்மம்
சிம்மம்: குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளைப் புரிந்துக் கொண்டு அதற்கேற்ப உங்களை மாற்றிக் கொள்வீர்கள். உறவினர்கள் வீடு தேடி வருவார்கள். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்யோகத்தில் அதிகாரிகள் உங்களுக்கு முன் உரிமை தருவார்கள். நினைத்ததை முடிக்கும் நாள்.
-
கன்னி
கன்னி: கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உறவினர்கள் உங்களைப் புரிந்துக் கொள்வார்கள். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் திடீர் லாபம் உண்டு. உத்யோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும். புத்துணர்ச்சி பெருகும் நாள்.
-
துலாம்
துலாம்: ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் நினைத்த வேகத்தில் சில வேலைகளை முடிக்க முடியாமல் தடை, தாமதங்கள் ஏற்படும். முன்கோபத்தால் பகை உண்டாகும். வியாபாரத்தில் வசூல் மந்தமாக இருக்கும். உத்யோகத்தில் அதிகாரிகளிடம் வளைந்து கொடுத்து போவது நல்லது. சகிப்புத் தன்மை தேவைப்படும் நாள்.
-
விருச்சிகம்
விருச்சிகம்: குடும்பத்தினரை அனுசரித்துப் போங்கள். ஆடம்பர செலவுகளால் சேமிப்புகள் கரையும். உறவினர்களுடன் பகைமை வந்து நீங்கும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களிடம் நயமாகப் பேசுங்கள். உத்யோகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும். தடைகளை தாண்டி முன்னேறும் நாள்.
-
தனுசு
தனுசு: தவறு செய்பவர்களை தட்டிக் கேட்பீர்கள். கல்யாண முயற்சிகள் பலிதமாகும். சில வேலைகளை விட்டுக் கொடுத்து முடிப்பீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்யோகத்தில் பாராட்டப்படுவீர்கள். சிந்தனைத் திறன் பெருகும் நாள்.
-
மகரம்
மகரம்: புதிய பாதையில் பயணிக்கத் தொடங்குவீர்கள். உறவினர், நண்பர்களால் ஆதாயம் உண்டு. சிலர் உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். அலுவலகத்தில் மரியாதைக் கூடும். முயற்சிகள் பலிதமாகும் நாள்.
-
கும்பம்
கும்பம்: குடும்பத்தாரின் ஆதரவுப் பெருகும். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை தந்து முடிப்பீர்கள். நேர்மறை எண்ணங்கள் பிறக்கும். வியாபாரத்தில் தள்ளிப் போன ஒப்பந்தம் கையெழுத்தாகும். உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். மனநிம்மதி கிட்டும் நாள்.
-
மீனம்
மீனம்: சந்திராஷ்டமம் நீடிப்பதால் தர்மசங்கடமான சூழ்நிலைகளில் அவ்வப் போது சிக்குவீர்கள். அக்கம்-பக்கம் இருப்பவர்களை அனுசரித்துப் போங்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த பணம் தாமதமாக வரும். உத்யோகத்தில் அதிகாரிகளால் அலைகழிக்கப்படுவீர்கள். பொறுப்புணர்ந்து செயல்பட வேண்டிய நாள்.