யாழ். ஆனைக்கோட்டை – அரசடி பகுதியில் ஓடிக்கொண்டிருந்த கார் திடீரென தீ பிடித்து எரிந்துள்ளதன் காரணமாக அப்பகுதியில் பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது.
இன்று இரவு 8 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
காரில் ஏற்பட்ட மின் ஒழுக்கின் காரணமாக குறித்த விபத்து நேர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
காரில் இருந்து புகை வந்ததன் காரணமாக காரில் பயணித்தவர்கள் அதிலிருந்து கீழிறங்கியுள்ளனர், அதன் பின்னர் கார் தீப்பற்றி எரிந்துள்ளது.
பின்னர் யாழ். மாநகரசபை தீயணைப்பு பிரிவுக்கு மக்கள் கொடுத்த முறைப்பாட்டின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு பிரிவினர் தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர்.
எனினும் குறித்த கார் முற்றிலும் தீக்கிரையாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.