வெள்ளத்தில் மிதக்கும் கேரளாவுக்காக காசு கேட்காதீங்க! கோபமாக திட்டிய பிரபல நடிகை

தொடர் கனமழையால் தற்போது கேரளா மாநிலம் முழுவதும் வெள்ளக்காடாக உள்ளது. மக்களுக்கு உதவ ராணுவம், அரசு தீவிரமாக பணியாற்றி வருகின்றனர்.

மேலும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ முன்வருமாறு முதலமைச்சர் பினராயி விஜயன் வேண்டுகோள் விடுத்தார். பிரபலங்கள் மற்றும் பொதுமக்கள் பலரும் உதவி வருகின்றனர்.

கேரளா வெள்ளத்திற்கு உதவ முன்வருமாறு ஒரு பிரபல தெலுங்கு நடிகை மெஹரீனின் ரசிகர்கள் பக்கம் சமூக வலைதளத்தில் பகிர்ந்திருந்தது. எதற்காக என் பெயரை பயன்படுத்தி பணம் கேட்கிறீர்கள். உதவ வேண்டும் என்றால் அவர்களாக செய்யட்டும் என கோபமாக கூறியுள்ளார்.

சுசீந்திரன் இயக்கத்தில் வெளிவந்த நெஞ்சில் துணிவிருந்தால் படத்தில் ஒரு முக்கிய ரோலில் நடிகை மெஹரீன் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.