பிக்பாஸ் நிகழ்ச்சி போலவே UKவில் நடத்தப்பட்டுவரும் பிக்பிரதர் நிகழ்ச்சியில் பங்கேற்க பிரபலமான நடிகர் ஒருவர் போட்டுள்ள கண்டிஷன் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.
குடிக்க சரக்கு கண்டிப்பாக வேண்டும். champagne, prosecco அல்லது cava தனக்கு நிச்சயம் வேண்டும், அப்போது தான் வீட்டில் இருப்பேன் என பிரபல நடிகர் HUMAN Ken Doll Rodrigo Alves கூறியுள்ளார்.
அது மட்டுமின்றி அவர் வேறு சில கண்டிஷன்களையும் போட்டுள்ளார்.
அவர் உடலில் பல்வேறு இடங்களை அழகாக்க அறுவை சிகிச்சை செய்துள்ளதால் ஆர்கானிக் உணவுகள் மட்டுமே சாப்பிடுவாராம். மேலும் கண்களில் விடும் ட்ராப்ஸ் இருந்துகொண்டே இருக்க வேண்டும், இல்லை என்றால் எனக்கு கண் தெரியாது என பல்வேறு கண்டிஷன்களை அவர் போட்டுள்ளார்.
Rodrigo Alvesஐ ஷோவுக்கு கொண்டு வர இரண்டு வருடங்களாக முயன்று வந்த தயாரிப்பாளர்களிடம் இந்த கண்டிஷன்களை குறிப்பிட்டு காண்ட்ராக்ட் போட்டுள்ளார் அவர்.
அவர் போதையில் இருந்தால் நிகழ்ச்சி விதிமுறைகளை பின்பற்றமாட்டார், மேலும் அதிக அளவில் பிரச்சனைகள் வரும் என தெரிந்தே பிக்பிரதர் தயாரிப்பாளர்கள் அவரை போட்டியில் சேர்த்துள்ளனர்.