பிக்பாஸ் வீட்டில் முக்கிய போட்டியாளர்களாக உள்ளவர் மும்தாஜ். இவர் இன்று பிக்பாஸ் நிகழ்ச்சியில் நடந்த டாஸ்கின் போது நடந்துகொண்ட விதம் மற்ற போட்டியாளர்களின் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.
யார் நன்றாக விளையாடினார்கள் என பிக்பாஸ் கேட்டபோது “நான்தான்” என தன்னையே மும்தாஜ் தேர்ந்தெடுத்துகொண்டாராம், ஆனால் பின்னர் மற்ற போட்டியாளர்கள் மஹத் தான் என்று சொன்னதால் தன் முடிவை மாற்றிக்கொண்டார் மும்தாஜ்.
பின்னர் இந்த விஷயம் பற்றி மும்தாஜ்-மஹத் இடையே வாக்குவாதம் நடந்தது. “உங்களின் உண்மை முகம் வெளிப்பட்டுவிட்டது . இது தான் நீங்க.. தேவைப்படும் போது ஒருவரை யூஸ் பண்ணிக்குவீங்க.. மற்ற நேரத்தில் தூக்கி போட்டுவிடுவீங்க” என மஹத் மும்தாஜை திட்டினார்.