சென்னை: திமுக தலைவராக இருந்த கருணாநிதியின் மகன் மு.க. அழகிரி தற்போது தனது பேஸ்புக் பக்கத்தில் அதிரடியான வீடியோ ஒன்றை பதிவிட்டு உள்ளார். அந்த வீடியோவில் இடம் பெற்றுள்ள பாடல் வரிகள் திமுக.,வினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அழகிரியின் ஆட்டம் ஆரம்பம் என்றுதான் இந்தப் பாடல் வரிகளைக் கேட்டதும் தோன்றுகிறது. மேலும் இது உதயநிதியின் தயாரிப்பு என்பதுடன் வீடியோ முடிகிறது. இந்த வீடியோ திமுக.,வினர் மத்தியில் மட்டுமல்ல, தமிழக அரசியலில் மிகப் பெரும் பரபரப்பையும் எதிர்ப்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
முன்னதாக தி.மு.க பொதுக்குழுவில் தான் யார் என்பதைக் காட்டுகிறேன் என்று ஸ்டாலினுக்கு அழகிரி சவால் #karunanidhi #stalin #Azhagiri விடுத்திருப்பதாக செய்திகள் வெளியாகின.
தொடர்ந்து, திருவாரூருக்கு மாஸ் என்ட்ரி கொடுக்கிறார் கருணாநிதியின் பேரன் உதயநிதி, என்றும், திருப்பரங்குன்றம் தொகுதியில் மதுரை அஞ்சா நெஞ்சன் அழகிரி ரீ என்ட்ரி கொடுக்கிறார் என்றும் கூறப்பட்டது. அதன்படி, தற்போது காலியாகவுள்ள திருப்பரங்குன்றம் தொகுதியில் அழகிரி நிற்பதற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளன.
முன்னதாக சில ஊடகங்களில், ஸ்டாலினுக்கு பக்க பலமாக அழகிரி இருப்பார் என்று ஒரு புறத்தில் செய்திகள் பரப்பப் பட்டன. மனம் திறந்த அழகிரி என்று ஊடகங்களில் பரப்பப் பட்ட அந்த செய்திகளில், யாரோ ஒரு திமுக., புள்ளி பேசியதாக சில கருத்துகள் முன்வைக்கப் பட்டன. அதில், ஸ்டாலின் அழுதது, அழகிரியின் மனத்தில் தைத்துவிட்டதாகவும், அந்த அழுகைக்கு பரிசாக, திமுக., தலைமைப் பதவியை தம்பிக்கே விட்டுக் கொடுத்துவிட்டு, அழகிரி அவருக்கு உறுதுணையாக இருப்பதாக தீர்மானம் செய்துவிட்டது போலவும் செய்திகள் பரப்பப் பட்டன.
இந்நிலையில், அழகிரியின் இந்த பேஸ்புக் பதிவு, பலரின் புருவங்களை உயர்த்த வைத்துள்ளது. அந்த பேஸ்புக் வீடியோ பதிவு…
திமுக., செயற்குழுக் கூட்டம் அவசரமாகக் கூடுகிறது என்று ஒரு செய்தி வெளியானபோது, தொண்டர்கள் வேறு விதமாக இதைப் புரிந்து கொள்ளக் கூடும் என்று நினைத்துதான், அது தலைவர் மறைவுக்கான அஞ்சலிக் கூட்டம் மட்டுமே என்று தெளிவுபடுத்தி ஸ்டாலின் விளக்கம் கொடுத்தார்.